<$BlogRSDUrl$>

Thursday, January 27, 2005

சிந்திக்க ஒரு நிஜ உரையாடல்


".... ஹாய்.. எப்படி இருக்க..? "

"... நான் நல்லா இருக்கேன் சோனியா, நீ நல்லா இருக்கியா.. ? "

"... நானும் நல்லா இருக்கேன்.., எங்க போற உன்னோட அபார்ட்மெண்டுக்கா..? "

"...ஆமாம். அப்புறம், இப்பல்லாம் இங்க ஜெர்மனியில் படிக்க நம்ம பக்கத்தில் இருந்து நிறையப் பேரு வர்றாங்க இல்லையா ..? "

"... ஆமா, ஏகப்பட்ட பேர் நம்ம யுனிவர்சிட்டியிலேயே படிக்கிறாங்க, என்னை மாதிரி இந்தியால இருந்தே கிட்டத்தட்ட 50 பேர் இருக்காங்க..."

"... சரிதான், இந்தியால இருந்து ரொம்பப் பேர் வந்துருக்காங்க, நான், என்னோட பிரண்ட்ஸ் ரெண்டு மூணு பேர் அப்படின்னு பாகிஸ்தான்ல இருந்தும் கொஞ்சப் பேரை இப்பப் பார்க்க முடியுது... "

"... ஆமா, பங்களாதேஷ், சீனா, தைவான், நேபாளத்துல இருந்தும் ஸ்டுடண்ட்ஸ் படிக்கிறாங்க... "

"... இதைத்தவிர ஸ்ரீநகர்-காஷ்மீரில் இருந்தும் ஒரு பையன் இருக்கான்னு நினைக்கிறேன்.."

" !! ......................................... ?? !! "
| | |
Comments:
புரியல கண்ணு
 

:-D :-D
 

கார்த்திக்ரமாஸ்,
உங்களுக்குப் புரிஞ்சதில் சந்தோசம். :)
 

விஜய்,
இது உங்களுக்குப் புரியலையா.. ? இந்தியாவில் இருந்து 50 பேரும், காஷ்மீரில் இருந்து ஒரு பையனும் இங்க இருக்குறாங்கன்னு அந்தப் பாகிஸ்தான் பொண்ணு சொன்னதோட அர்த்தம் புரியலைன்னு சொன்னா ரொம்ப வருத்தப்படுவேன். ஸ்ரீநகர்-காஷ்மீர் எந்த நாட்டுல இருக்குது...? அது இந்தியாவுக்குச் சொந்தம் இல்லையா.. ? அப்படி இருக்குறப்ப பாகிஸ்தான் பொண்ணு ஏன் அப்படிச் சொல்லுது..? அப்படின்னா அந்தப் பொண்ணு மனசுல( அல்லது பாகிஸ்தான்காரங்க ) என்ன இருக்குது... ?
 

குழப்பம் 1: அதாவது பாகிஸ்தானிலிருந்து வந்த பொண்னுங்கிற மாதிரி அந்த டயலாக் வரல. முதல்ல என்ன நினைச்சேன்னா சோனியாங்கிறது நம்ம ஊரு பொண்ணுன்னு நினைச்சேன்.

குழப்பம் 2: Jsri சொன்ன மாதிரி 'இதை தவிர' பார்த்தவுடனே ஸ்ரீ நகர் தனி நாட நெனச்சி சொல்லுறாங்கன்னு நினைச்சேன். இந்த எடத்தில ஒரு வேளை சோனியாங்கிற ஜெர்மன் பொண்ணோன்னு நினைச்சேன்.

அது தான் புரியல. ஆன இப்ப புரிஞ்சிருச்சி...
 

நிஜமாகவே உங்களிடம் இதை சொன்னார்களா? ஆச்சரியம்தான்.

நான் சந்தித்தவரையில், ஓரளவாவது, பிரச்சினையில் பாகிஸ்தானின் பங்கை உணர்ந்தே இருக்கிறார்கள். (பலர் காஷ்மீரையும் முஷாரஃபையும் பற்றி பேசாமல் இருப்பதையே விரும்புகிறார்கள்.)

என்னுடன் மதிய உணவு சாப்பிடும்போது நாட்டு நடப்பை அலச ஆரம்பித்தாலும் கோத்ரா, பிஜேபி என்று இந்தப் பக்கம் நாலு இடி, சர்வாதிகாரி ஆட்சி, ஊழல் என்று அந்தப் பக்கம் நாலு இடி சமமாகப் போடுவார்கள்.

இந்த உரையாடல் எவ்வாறு தொடர்ந்தது? என்ன பதில் சொன்னீர்கள் ;-)
 

பாகிஸ்தான் தயரிப்பு மேப்பையும், உலக உருண்டையையும் பார்த்தால், காஷ்மீர் தனி நாடாகத்தான் காண்பிக்கப்பட்டு உள்ளது. (இங்கே ஐ.அ.எமிரேட்டில் கிடைப்பது பெரும்பாலும் பாகிஸ்தான் தயாரிப்புகளே.)

மேலும், ஷார்ஜாவில் கிரிக்கெட் நடக்கும் போது மூன்று வகை ரசிகர்களையும் காணலாம் - இந்தியர், பாகிஸ்தானியர், காஷ்மிரி!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com