<$BlogRSDUrl$>

Wednesday, January 12, 2005

உங்களின் தாய்மொழி - இந்தி


அருகிலுள்ள ரயில்நிலையத்துக்கு நடந்துகொண்டிருந்தேன். ரயில் நிலையம் பல்கலைகழகத்தில் இருந்து வெகுதொலைவில் இல்லை. நடந்தால் அதிகபட்சமாக 5 நிமிடம், ஜெர்மனியில் இந்தப் பாதாள ரயில் - கிட்டத்தட்ட நம்மூர் டவுன் பஸ்போலத்தான். நான் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டை அடைய பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்தால் 20 நிமிடத்துக்குமேல் ஆகாது. இதையே ரயிலிலென்றால் அதிகபட்சம் 3 நிமிடம். சிலநேரம் ரயில் வர 10 நிமிடம் ஆனாலும் நடக்கச் சோம்பல்பட்டு ரயிலுக்காய்க் காத்திருப்பதுண்டு. நடந்துகொண்டிருக்கும்போது பின்னாலிருந்து ஒரு சத்தம்.

".... ஹாய் .. முத்து.."

"... ஹலோ.. இலா.. ஹவ் ஆர் யு..? .. "

"...பைன்.. தும் .. கைஸே :::++++-+ßßß&&&&§&/%/!:....... "

"ம்.... யா ... ", ஒரு மாதிரியாய் விளக்கெண்ணெய் குடித்த முகத்துடன் நான்.

"... ----??ß&&&$$$§§§§´......... "

இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முடிவுகட்டி,

"... இலா, சாரி..ஐ டோண்ட் நோ ஹிண்டி தேட்மச்... "

"... ஓ,.. ஐ ஆம் சாரி.. இஃப் ஐ சீ சம் இண்டியன், ஐ ஸ்டார்ட்டு ஸ்பீக் இன் ஹிண்டி, அண்ட் ஐ ஆம் வெரி ப்ளூயண்ட் இன் ஹிண்டி... "

"...யா.., நேச்சுரலி. பிகாஸ் தட்ஸ் யுவர் மதர் டங்.."

"... வாட்..? தட்ஸ் யுவர் மதர்டங் டூ ... ", கொஞ்சம் சந்தேகத்துடன் என்னை நோக்கி, "....யு ஆர் ப்ரம் டமில்னாட் - இண்டியா ஒன்லி.. இஸ்ஸிண்ட்டிட்..? "

இதைச் சொல்லும்போது ரயில்நிலையம் வந்துவிட்டது. அங்கே இன்னும் சில நண்ப, நண்பிகள் நின்று கொண்டிருந்தனர். அனைவரையும் பார்த்து ஹாய் சொல்லி புன்னகைக்கும்போது ரயில் வந்துவிட்டது. ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டதால் மேற்கொண்டு விட்ட இடத்தில் பேச்சைத் தொடரமுடியவில்லை.

பேசியவர் உடன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் நண்பி. இதிலிருந்து நிறைய விஷயங்கள் தெரிகின்றன. இதனை ஒரு தனிமனிதரின் சொற்பிழையாகவோ அல்லது கருத்துப்பிழையாகவோ பார்க்கவில்லை. அம்மொழி பேசும் பலரின் ஆழ்மனவெளிப்பாடாகவே தோன்றுகிறது. அந்த ஆழ்மன நம்பிக்கையே பலவற்றுக்குக்காரணமாக இருக்கிறது. நிறையப் படித்த பலருக்கும் தாய்மொழி, அலுவலகப்பயன்பாட்டு மொழி, செம்மொழி, தேசியமொழி ஆகியவற்றுக்கான வித்தியாசம் தெரியாமல் இருப்பது சாத்தியம்தான் போலும்.
| | |
Comments:
ஒரு திமிரையும், மேலாண்மையையும் "ஒரு தனிமனிதரின் சொற்பிழையாகவோ அல்லது கருத்துப்பிழையாகவோ பார்க்கவில்லை. அம்மொழி பேசும் பலரின் ஆழ்மனவெளிப்பாடாகவே தோன்றுகிறது." என்று சொல்லும் உங்களின் உளவியல், அவர்களின் உளவியலைவிட இன்னும் ஆராய்சிக்குரியதாய் எனக்கு படுகிறது.
 

ரோஸாவசந்த்,
நான் இன்னும் கொஞ்சம் சரியாகச் சொல்லியிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது..
அவர் சொன்னது கருத்துப்பிழை அல்ல, என்றோ சொற்பிழை அல்ல என்றோ இல்லை. அதையும் தாண்டி, அம்மொழி பேசும் பலர் ஆழ்மனத்தில் இந்தியாவின் மொழி இந்தி மட்டும்தான் என்று சிறுபிள்ளைத்தனமாக, கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கொண்டிருப்பதையே சொல்ல வந்தேன்.
 

இது உண்மையோ உண்மை!1 நானும் அமெரிக்காவில் சில பேரை இப்படி பார்த்திருக்கிறேன். இந்தி தெரியாவிட்டால் இந்தியன் இல்லை என்று சொல்வார்கள் போலிருக்கிறது
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com