<$BlogRSDUrl$>

Monday, June 21, 2004

ஜெர்மனி, சிம்ரன், ஆளவந்தான், இந்தியா.........


ஜெர்மனியில் இப்போதெல்லாம் அடிக்கடி இந்தியா பற்றிய பேச்சு கேட்கிறது. இந்தியா பற்றிய முழுமையான , தெளிவான கருத்து இல்லையென்றாலும் உலக அளவில் பெரும்பான்மையான நாடுகளில் இதுபோல் இந்தியா பற்றியும் , இந்தியத் திரைப்படங்கள் பற்றியும் பேசப்படுவது ஒரு மைல் கல்லே என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் பெரும்பாலோர் பசியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றே பலர் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சரி.. அது போகட்டும்.

சில நாட்களுக்கு முன் கமலின் ஆளவந்தான்(இந்தி) திரைப்படத்தை தொலைக்காட்சியில் காட்டினார்கள். இன்னொரு நாள் திடீரென சிம்ரனின் பேட்டியைக் காட்டி திகைக்க வைத்தார்கள். அவ்வப்போது நம்மூர் சக்தி மசாலா விளம்பரம்போல "மதராஸ் கறிமசாலா" சுவைத்துப் பாருங்கள் என்று ஒரு விளம்பரமும் வருகிறது. எல்லாம் ஜெர்மன் மொழியில்தான்.

சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி இருவர் கோமாளிகள் போல ஒருவர் ஏதாவது கேள்வி கேட்டு மற்றொருவர் பதில் சொல்வார். சன் டிவியிலோ அல்லது ராஜ் டிவியிலோ " அரி, கொரி.. " என்பது போல ஒரு நிகழ்ச்சி உண்டே அதுபோலத்தான். பெரும்பாலும் நகைச்சுவையைச் சார்ந்தே இருக்கும். அதில் வந்த ஒன்று.

".... இந்தியாவின் முக்கிய மொழிகளில் சிலவற்றைச் சொல்லு பார்க்கலாம்.."

"... ஆங்கிலம் , இந்தி, ம்ம்ம்ம் .. அப்புறம் எச்.டி.எம்.எல் . ..."
| | |
Comments:
//முத்து, அங்கே ஜெர்மன் தான் முழு முதல் மொழியா அல்லது ஆங்கிலத்தைக் கொண்டும் சமாளிக்கலாமா?//

ராஜா,
பொதுவாய் ஏதாவது கடைக்குப் போனாலோ, அல்லது யாரிடமாவது வழி கேட்டாலோ ஆங்கிலத்தில் பேசிச் சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான். இங்கு ஆங்கிலத்தில் பேசுபவர்கள் மிகக் குறைவு. அவர்களைச் சொல்லியும் குறை இல்லை. பள்ளியில் படிப்பதில் இருந்து , தொலைக்காட்சி வரை அனைத்தும் ஜெர்மன் மொழிதான். இவ்வளவு ஏன் அனைத்து கணினி மென்பொருட்களும் ஜெர்மன்தான். ஒரு சிலரிடம் ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டால் கொஞ்சம் கோபப்படக்கூடச் செய்கிறார்கள்.

என்றாலும் பல்கலைக்கழகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சீனா, வியட்நாம், துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இங்கு வந்து மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் முதலில் இரு வருடம் ஜெர்மன் மொழி படித்துத் தேர்ச்சி பெற்ற பின்னரே தங்கள் பட்டப்படிப்பைத் தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் இருந்து வரும் மாணவர்கள் யாரும் ஜெர்மன் வழியில் நடக்கும் படிப்பில் சேருவதில்லை. இதனால் எந்தெந்தப் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலவழிப் பட்டப்படிப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்திய மாணவர்களே மிக அதிகம். உதாரணமாய், எனது பல்கலைக்கழகத்தில் ஒரு ஆங்கிலவழி மேற்படிப்பு இருக்கிறது. அதில் மொத்த மாணவர்களில் 75 % பேருக்கு மேல் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்கள்.
 

Hi Muthu. You've posted a comment on my 'payanangal' blog - but I couldn't read it. Could you please repost it in Shangrila?
 

பவித்ரா ..
உங்களோட பயணங்களில் பதித்திருந்த பதிலை சங்கரி-லா விலும் பதித்துவிட்டேன்.
 

Well, Keep up your art of blogging.

Cheers,
Muthu Veerappan (muthu@periyakaruppan.com)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com