Tuesday, May 16, 2006
வெடிகுண்டு - மகளிர் விடுதியில்
பக்கத்து விடுதியான மகளிர்விடுதியில், ஆடவர் சிலர் அணுகுண்டு வைத்தனர். அதிர்ச்சியாக இருக்கிறதா?. முழுவதும் தெரிந்தால் அதிர்ச்சியடையமாட்டீர்கள், ஒருவேளை நீங்கள் அவனை பாராட்டக்கூடும்.
மாலை நேரம். விடுதியில் தேநீர் குடித்துவிட்டு, உலகப் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று வழக்கம்போல மாணவர்கள் வம்பளந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பையன் மட்டும் எதையோ கையில் மறைத்துக்கொண்டு அவன் அறைக்கு கொண்டுசென்று கொண்டிருந்தான். அதை அவ்வளவாய் யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று இரவு உணவை முடித்துவிட்டு, டிவி பார்த்துவிட்டு அந்தத் தொலைக்காட்சி அறையிலேயே விவாதங்கள், கேலிகிண்டல்கள் என்று தொடர்ந்தது. நேரம் ஆனதும் எல்லாரும் இடத்தைக் காலி செய்துவிட்டு அவரரவர் அறைக்குப் போய்விட்டார்கள்.
நள்ளிரவு. சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெளியே சத்தம் கேட்டது. ஏதோ வெடித்தது போல இருந்தது. சத்தம் அருகிலுள்ள மகளிர்விடுதிப் பக்கத்தில் இருந்து வந்தது. அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் உளவுத்துறை அறிக்கையைப் பார்த்தபின்தான் தெரிந்தது. சரியாக, இரவு 12 மணிக்கு மகளிர் விடுதியின் முன்னால் பட்டாசுகள் வெடித்திருக்கின்றன. சுவாரசியம் என்னவென்றால், அன்று மகளிர் விடுதியில் உள்ள ஒருவருக்குப் பிறந்தநாள். பொதுவாக, இரவு 12 மணிக்கு மகளிர் விடுதியை விட்டு யாரும் வெளியே வருவதில்லை. அப்படியானால், பட்டாசு வெடித்தது யார் என யாருக்கும் தெரியவில்லை. மெதுவாக, ஆடவர் விடுதியில் விசாரித்ததில் கொஞ்சம் விஷயம் கிடைத்தது. சரிதான். ஏன்கூடாது?. தலைவர்கள், நடிகர்கள் பிறந்த நாளை மட்டும் கொண்டாடும்போது, வேண்டியவர் பிறந்த நாளை அவன் கொண்டாடியதில் என்ன தவறு இருக்கிறது. புரியவில்லையா?. அன்று பிறந்த நாள் கொண்டாடியவருக்குப் பிடித்தமான தோழன் ஒருவர், சகாக்கள் சிலருடன் போய் மகளிர் விடுதிக்கு முன்பு சரியாக 12 மணிக்கு அணுகுண்டு பட்டாசு வெடித்து தன் அன்பைக் காட்டியிருக்கிறார்.
நீங்க யாராவது இதுபோல் ஏதும் செய்ததுண்டா?. :-)
| | |

Comments:
Of course I know this is just a entertaining write up. However it seems that you never realize the how a real bomb blast can be. :-(
Rose Mary,
Thanks for your comment.
Real bomb blast?, oh..no.. a true human can't harm innocents by his actions or by words. Of course, I can realize how a real bomb blast can be, thats happening all over the world.

முத்து (ஆர்டினரி),
இதுக்கு பேருதான் போட்டு வாங்குறதா ? :-)
வழக்கமா இந்த மாதிரி பதிவுல நம்ம செஞ்சத நண்பன் செஞ்ச மாதிரி சொல்லுவாங்கன்னு ஒரு கோனார் நோட்ஸ்ல படிச்சிருக்கேன் :-)

//வழக்கமா இந்த மாதிரி பதிவுல நம்ம செஞ்சத நண்பன் செஞ்ச மாதிரி சொல்லுவாங்கன்னு ஒரு கோனார் நோட்ஸ்ல படிச்சிருக்கேன் :-)///
கார்த்திக் ஜெயந்த்,
இம்மாதிரிப் பதிவுகளில் நாம் செய்ததை நண்பன் செய்தான் என்று சொல்வது வழக்கம்தான். ஆனால், நான் அந்த விடுதியில் இருந்த காலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவுக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை. :-(.

மறுமொழிக்கு நன்றி நேசகுமார்.
அந்தக் குறிப்பிட்ட பட்டாசை எங்க ஊரில் 'அணுகுண்டு' என்று சொல்வார்கள். வெடிகுண்டு என்பதற்குப் பதில் அணுகுண்டு என்று போட்டிருக்கலாமோ ;-). இப்போது தலைப்பை மாற்றினால் திரும்பவும் தமிழ்மணத்தில் அது தெரியும், நாளைக்கு முயற்சி செய்யலாம். :-).
Post a Comment