<$BlogRSDUrl$>

Sunday, April 02, 2006

சரத்குமார் திமுகவுக்கு எதிராகிறார் ??

ஒரு பக்கம் அதிமுக நட்சத்திரக்கூட்டத்தை ஒவ்வொன்றாய் அதிகரித்துக்கொண்டிருக்க திமுகவில் இருந்து நட்சத்திரங்கள் ஒவ்வொருவராய் குறைந்துகொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு ஓட்டுக்களை அவர் சேர்ந்த கட்சிக்கு அதிகரிப்பார்கள் என்பதே கொஞ்சம் கேள்விதான். இதில் ரஜினி, விஜய்காந்த் போன்ற கொஞ்சம் மவுசுள்ள பார்ட்டிகள் தாம் சார்ந்த கட்சிக்கு ஓட்டுக்களை அதிகமாக்குவார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். மற்றபடி செந்தில், குண்டு கல்யாணம், முரளி போன்ற நடிகர்களின் செல்வாக்கு, அவர்களின் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தின் செல்வாக்கு ஆகியவை முதலில் சொன்ன நடிகர்கள் அளவுக்கு இராது என்பது கண்கூடு.

சரத்குமார் ஒருவகையில் முதலில் சொன்ன வகையைச் சார்ந்தவர்தான். அவருக்கு என தென்மாவட்டங்களில் கொஞ்சம் ஓட்டு வங்கிகள் உண்டு. அதனால்தானோ என்னவோ திமுகவில் அவரால் எம்பி வரை ஆக முடிந்தது. தனது ரசிகர் செல்வாக்கைக் காட்டி மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தவருக்கு அது முடியாமல் போனதில் கொஞ்சம் ஏமாற்றம். நாடார் சமூகத்தினருக்குத் திமுகவில் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று வெளிப்படையாய்ச் சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இந்தக் கோபத்தில் கடந்த தேர்தலில் முன்பு செய்ததுபோல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலாது என்று சொல்லியது திமுக தலைகளை கொஞ்சம் எரிச்சல்படுத்தியிருக்கலாம். தன்னை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பதாய்க் காரணம் காட்டி தனிக்கட்சி தொடங்கவோ அல்லது எதிரணிப்பக்கம் சாயவோகூட அவர் செய்யக்கூடும் போலத்தெரிகிறது. இனிமேல் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவது அவ்வள்வு எளிதல்ல, எனவே எதிரணிப்பக்கம் சாய்ந்தாலும் சாயக்கூடும். ஏற்கனவே கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஜெயித்தாலும் தனிப்பெரும்பான்மை அமைக்கத் தேவையான அளவைவிடக் குறைந்த அளவு தொகுதிகள் வந்துவிடுமோ என்று திமுக கவலை கொண்டிருக்க, அதற்குப் புதுப்புதுச் சோதனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் திமுகவிற்கு இப்போதிருப்பதுபோல் அதிமுகவிற்குக் கவலைகள் குறைவு.

சமீபத்திய தகவல்களின்படி, சரத்குமார் உடனடியாக திமுகவிட்டு விலக வேண்டும் என்று ரசிகர்கள்(உண்மையாகவா?) அழுத்தம் கொடுக்கிறார்களாம். இன்னும் ஓரிரு நாட்களில் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்துவிடும்போலத் தெரிகிறது. அவ்வாறு சரத் வெளியேறும்பட்சத்தில் தென்மாவட்டங்களில் திமுகவிற்கு அது கொஞ்சம் பின்னடைவாகவும், மதிமுக உள்ளிட்ட அதிமுக கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.
| | |
Comments:
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா.
 

என்னய்யா நடக்கிறது தமிழ்நாட்டில்!!
ஓய்ந்து போன நடிகர் நடிகையர்க்கு அரசியல்தான் புகலிடமா! ஜனநாயகம் ஒரு கேலி கூத்தாகி விட்டதையா!! இதற்க்கெல்லாம் ஒரு விடிவு காலமே கிடையாதா!
 

athimbher,
கொஞ்சம் கவர்ச்சியான செய்தியா தெரிஞ்சது, அதான் போட்டேன். மற்றபடி, நீங்கள் சொல்வதுபோல்தான் நானும். நரி அதிமுகவுக்கு போனா என்ன, திமுக வுக்கு போனா என்ன. எல்லாம் ஒன்னுதான்.
 

ஸ்ரீதர்,
அரசியலில் எதுவும் கலக்கலாம். கிரிமினல் குற்றவாளிகளும், ரவுகளுக்கும்கூட புகலிடம் அரசியல்தான். அந்த வகையில் நடிகர்கள் வருவது கொஞ்சம் ஆறுதலான விஷயம்தான் :-).
 

முத்தண்ணா!

எல்லா வேலைக்கும் ஒரு minimum qualification இருக்கிறதில்லயா! அது ஏன் அரசியல்வாதிக்கு இல்லை. அது போகட்டும். நிர்வாக திறனாவது இவர்களுக்கு உண்டா! அதுவும் இல்லையே! உதாரணத்துக்கு சொல்கிறேன்.. கார்த்திக் போன்ற மார்க்கெட் இழந்த, கடனாளி...ரெண்டு பெண்டாட்டி உள்ளவர்களை எல்லாம் அரசியலில் disqualify செய்தால் என்ன?

நன்கு படித்த, நிற்வாக திறன் உள்ள, பொது அறிவு நிறைந்த நல்ல மனிதர்கள் மட்டுமே அரசியலில் இருக்கலாம் என்று சட்டம் இயற்றினால் என்ன? காமராஜர் படித்தவரா? என்று ஓட்டை வாதம் செய்கிறவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். He is an Exception and execptions cannot be examples.
 

ஸ்ரீதர்,
மிக நியாயமான கேள்வி. சாதாரண கிளார்க்கில் இருந்து துப்புரவுத் தொழிலாளிகள் பணியிடம் வரை தெளிவாக தகுதிகள் வரையறுத்திருக்கும்போது, நாட்டையே ஆளும் அரசியல்வாதிகளின் கல்வித்தகுதிகளும், இன்ன பிற தகுதிகளும் இன்னும் சரிவர வரையறுக்கப்படாமல்(தகுதியே தேவையில்லை), 20-25 வயதானால் கழுதைகள்கூட தேர்தலில் நிற்கலாம்(கழுதைகள் என்னை மன்னிக்கட்டும்),நாட்டை ஆளலாம் என்பதுபோல் தட்டையாக தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒரு நாட்டின் சாபக்கேடு. வேறு என்ன சொல்ல?.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com