<$BlogRSDUrl$>

Wednesday, March 29, 2006

கார்த்திக் - விஜய்காந்த் கூட்டு

தனியாகப் போட்டியிடப்போவதாய்க் கூறிவந்த விஜய்காந்த், பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டு வைக்கப்போவதாய்த் தெரிகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டுமே வலிமையான நிலையில் உள்ளதால் தனியாய்த் தேர்தலைச் சந்திப்பது அந்தளவுக்கு நல்லதல்ல எனப் பிறர் நினைப்பதாய்க் கூறப்படுகிறது.

திமுக, அதிமுக என எந்தக் கட்சிக்கூட்டணியில் சேர்வது எனக் கடைசிவரை குழப்பத்துடன் இருந்து, அதிமுக அழைப்பார்கள் என நம்பியிருந்து நடக்காமல் போனதால் விஜயகாந்த் கட்சியுடனாவது கூட்டுவைப்பது என்ற முடிவுக்குக் கார்த்திக் வந்துள்ளார். இவர்தவிர இத்தேர்தலில் இலவுகாத்த கிளிகளான திண்டிவனம், விஜய டி.ராஜேந்தர் போன்ற சிலரும் கூட்டணியில் சேரக்கூடும்.

ஜெயலலிதாவை எதிர்த்துக் கார்த்திக் ஆண்டிபட்டித் தொகுதியில் போட்டியிட உள்ளதால் இந்தக் கூட்டணி அதிக முக்கியத்துவம் பெறும், அல்லது குறைந்தபட்சம் சுவாரசியத்தை அதிகமாக்கும்.
| | |
Comments:
mohan,
I agree with your view.
 

சொலல் வல்லன் விஜயகாந்த்!!!!

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.' --[குறள் 647]

வள்ளுவன் வாக்கினுக்கேற்ப
விஜயகாந்த் செய்துவிட்டார்!

ரசிகர்களின் ஆணைக்குத் தலை வணங்குவேன் என்றார்.
தனிக்கட்சி அமைப்பேன் என்றார்.
தனித்துப் போட்டி என்றார்.
யாருடனும் கூட்டு இல்லை என்றார்.
இரு கழகங்களும் எதிரிகள் தான் என்றார்.
31-ம் தேதி பட்டியல் என்றார்.
பெண்களுக்கு கணிசமாக வாய்ப்பு உண்டு என்றார்.

இன்று சொன்னபடி செய்து காட்டி விட்டர்!
இதோ, அதோ என்று போக்கு காட்டி வரும் சந்தர்ப்பவாத போலித் தலைவர்களுக்கு இடையே,
இதோ ஒரு வெள்ளிக்கீற்று!

கருப்பு சூரியன் புறப்பட்டு விட்டான்!
மறுப்பு சொல்லாமல் மகுடம் சூட்டுவோம்!

தமிழகத்துக்கு விடிவு வேண்டும்!
அது இரு கழகங்கள் மூலமாக அல்ல என்பது
தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது!

இனிமேலும் ஏமாறாமல், கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்!
அரியணை ஏற்றுவோம் இவரை!
 

SK,
நீங்கள் சொல்வதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். வருவேன், வரமாட்டேன், லேட்டா வருவேன், லேட்டஸ்டா வருவேன், வரவேண்டிய நேரத்தில் வருவேன் இப்படியே சொல்லிக்கொண்டிருக்கும் ஆட்களுக்கு மத்தியில் வருவேன் என்று உறுதியாய்ச் சொன்ன விஜய்காந்த் சொன்னபடியே வந்தார். அவர் சொன்ன எதிலிருந்தும் இதுவரை பின்வாங்கவே இல்லை, கூட்டணியில் இருந்து மற்ற அனைத்திலும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அவர் அரசியலில் பிரகாசிக்க முடியுமா என்பதுதான் எனக்குச் சந்தேகமாய் இருக்கிறது. பார்க்கலாம்.. இன்னும் ஒரு மாதம்தானே இருக்கிறது.
 

உங்கள் மறுமொழிக்கு நன்றி மோகன்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com