<$BlogRSDUrl$>

Monday, March 20, 2006

உங்களுக்கும் பிடித்திருக்கலாம்

உலகத்தில் பலருக்கும் பல விஷயங்கள் பிடிக்கின்றன. பல விஷயங்களிலும் சில பிடிக்கின்றன. காரணமே இல்லாமல் சில பிடிக்காமல் போவதுமுண்டு. எனக்கு மிகவும் பிடித்த சில.

நகைச்சுவை, சிரிப்பு, புன்னகை
குழந்தைகள்
நண்பர்கள்
புத்தகங்கள், கலைகள்

பிடித்தவை என்று பட்டியல் போட்டால் மிகப் பெரிதாய் வரும், குறைந்த பட்சம் மேலே உள்ளதை மட்டுமாவது சொல்ல முயற்சிக்கிறேன்.

அடுத்தவரை மனம் மகிழ்ந்து சிரிக்க வைக்கும் அனைவரும், அனைத்துமே எனக்குப் பிடிக்கும். சிரிக்கச் சிரிக்கப் பேசும் நண்பர்கள் ( நண்பிகளும்தான் ;-) ). நகைச்சுவைத் துணுக்குகள், கடிகள், கார்ட்டூன்கள், நகைச்சுவைக் கதைகள், என
அனைத்துமே பிடித்தமான வகையைச் சார்ந்தவைதான். தெனாலி ராமன், பீர்பால், முல்லா என அனைத்து நகைச்சுவைக்கதைகளும் பிடிக்குமெனச் சொல்லவே வேண்டியதில்லை. படங்களில்கூட நகைச்சுவைப் படங்களே எனது முதல் சாய்ஸ். இதேபோல் அலைவரிசை ஒத்த நண்பர்களுடன் பேசும்போது யாரும் அருகில் இருந்தால் அவர்கள் கதி அதோ கதிதான். நானும் என் நண்பனும் ஒரு நாள் பேசிப் பேசி சிரித்ததைக் கேட்டு, எனது பக்கத்துவீட்டுக்காரர் நடுங்கியதே இதற்குச் சாட்சி, இரவு பத்து மணிக்குமேல் தான் வீட்டில் தனியாக இருக்கும்போது திடீர் திடீர் என வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்டால் பாவம் அவர் வேறு என்ன செய்வார் ?.

என்னடா இவன் திடீரென இவனுக்குப் பிடித்தது என ஆரம்பிக்கிறானே என யாரும் குழம்பமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நண்பர் சாம் சங்கிலித் தொடருக்கு என்னை அழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. மற்ற பிடித்த விஷயங்களையும் சீக்கிரமே எழுதுகிறேன்.
| | |
Comments:
ஹைய்யா, எனக்கும் நகைச்சுவைப் படங்களைத்தான் அதிகம் பிடிக்கும்.
நம் சொந்தக் கதையே சோகக்கதை.
அதான் மனம் விட்டுச் சிரிக்கணுமுன்னு இப்படி :-))))
 

துளசியக்கா,
சரியாச் சொன்னீங்க. வாழ்க்கையில் அவரவர் கதையிலேயே ஆயிரெத்தெட்டு பிரச்சினை. இதில் சினிமா, கதையிலும் அதே மாதிரி என்றால் நல்லாவா இருக்கும். ஒருவேளை பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாத ஆளுங்களுக்கு சோகக்கதைகள் பிக்சன் ஸ்டோரி போல சுவாரசியமா இருக்குமோ என்னவோ ? :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com