<$BlogRSDUrl$>

Monday, February 06, 2006

வழுக்கிப் பழகு

அது உற்சாகமான அனுபவம்தான, என்னைச் சுற்றி வேகமாய் 'விர்விர்' எனப்போய்க்கொண்டிருந்த வாண்டுகளுக்கு என்னைப் பார்ப்பதே உற்சாகமாய் இருந்தது. முதன்முதலில் நான் நடக்க ஆரம்பித்தபோதுகூட இப்படித்தான் கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். கொஞ்ச தூரம் அழகாய் நகர்ந்து சந்தோஷப்படும் முன்னர் 'டமார்' என்று கீழே விழுந்துகொண்டே இருந்தேன். 4 வயது, 5 வயது வாண்டுகள் மட்டும் எப்படி வேகமாய்ப் போகிறார்களோ?. "மூத்த வலைப்பதிவாளர்" அஞ்சலிகூட அவருடைய அனுபவம் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். ஒருவேளை அவரும் முதன் முதலில் இதுபோல் கீழேவிழுந்து பழகியவராகத்தான் இருப்பாரோ என்னவோ?. ஒரே ஆறுதல் என்னை விட பெரிய ஆட்கள் பலரும் என்னைப் போல் கீழே விழுந்துகொண்டிருந்தார்கள். சென்ற சனிக்கிழமை மாலை நாங்கள் சறுக்கிய தளம் இதுதான்.
என்னுடன் வந்த எனது நண்பருக்கும் இதுதான் முதல் தடவை. பல தடவை கீழே விழுந்து இதற்கு மேல் கீழே விழ உடம்பில் தெம்பில்லை என்று அந்த ஐஸ் ஸ்கேட்டிங் தளத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார். அவர் பின்னால் நானும் வந்துவிட்டேன்.
| | |
Comments:
முத்து. இது நல்லாத் தான் இருக்கும் போல இருக்கு. அமெரிக்கா வந்து எட்டு ஒன்பது வருஷம் ஆச்சு. ஆனா இன்னும் இந்த வழுக்கலுக்குப் போனதில்லை. போய் பார்க்கணும். :-)
 

குமரன்,
ஒரு தடவை போய்ப் பாருங்க. கிட்டத்தட்ட மீண்டும் நடை பழகுறது மாதிரிதான். பல தடவை கீழே விழுந்துதான் பழக வேண்டும்.
 

நானும் சில தடவைகள் விழுந்தேன்தான். இப்போது நல்ல இண்டெரெஸ்டிங்காக இருக்கு. நான் இலங்கை போய் வந்த பின்னர் இன்னும் நன்றாக பழக வேண்டும்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com