Friday, March 17, 2006
அமானுஷ்யங்கள்
சின்ன வயதிலிருந்தே எனக்கு அறிவியல் மீது எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவுக்கு அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் மீதும் ஆர்வம் உண்டு. நேரடியாய்ப் பெரியது ஒன்றையும் கண்டதில்லை, சோதிடத்தை அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று முழுவதுமாய் ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லை, அதில் சில அனுபவங்கள் உண்டு, சின்ன வயதில் - ஒரு 15 வயதிருக்கும் அப்போது. எனது ஜாதகத்தை வைத்து அவர் எனக்கு, எனது மாமாவுக்கு, என்னுடைய தாத்தாவின் அப்பாவுக்கு, எனது வீடு தாண்டி 6 ஆம் வீட்டிலிருப்பவருக்கு என ஆச்சரியப்படும், யூகிக்க முடியாத கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பலவற்றைச் சொன்னார். கொஞ்சமும் நம்பமுடியாத, எனக்குத் தெரிந்த அறிவியல்படி புரிந்துகொள்ள முடியாத நிகழ்வு அது. ஆனால் அது முழுக்க உண்மை. சோதிடத்தை அமானுஷ்யம் என்று சொன்னால் சோதிடர்கள் பலர் கோபங்கொண்டு சண்டைக்கு வரலாம், சரி இருக்கட்டும்.
இதைத் தவிர கிட்டத்தட்ட அதே 15 வயதில் சில நண்பர்களுடன் சேர்ந்து ஆவிகளுடன் பேச முயன்ற எனது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் அது பற்றி நேரடி அனுபவங்களைப் பலரிடம் கேட்டதுண்டு. நமது பாஸ்டன் பாலா மற்றும் பக்கா பகுத்தறிவு பேசும் நண்பர் காஞ்சிபிலிம்ஸ் (அவர் அந்த வலைப்பதிவை மூடிவிட்டார்) ஆகியோரும் இதில் அடக்கம்.
இதைத் தவிர சம்பந்தமேயில்லாமல் திடீரெனத் தோன்றிய விசித்திர எண்ணங்கள், அப்படியே கொஞ்சநேரத்தில் நடந்து ஆச்சரியப்படுத்தியதுண்டு. மேலும் இது நடக்கப்போகிறது என நெருக்கமானவர்கள் சொன்னவை பல அப்படியே நடந்ததுண்டு, சில தவறியதுமுண்டு.
நமது நண்பர் முருகபூபதி கொஞ்ச நாளைக்கு முன்னால் அவருக்கு நிகந்த நிகழ்வொன்றைச் சொல்லியிருக்கிறார். நான் இதுபோல் கேள்விப்படுவது முதல் முறையல்ல, இதை நான் இரண்டாம் முறையாகக் கேள்விப்படுகிறேன். கொஞ்ச நாளைக்கு முன்னால்வரை ஜெர்மனியில் எனக்கு அருகில் இருந்த எனது நண்பரொருவருக்கு இதே அனுபவம் அப்படியே ஏற்பட்டது, சம்பவம் நடந்தபோது அவர் அருகில் நான் இல்லை, அவர் சொல்லித்தான் நடந்தது எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட முருகபூபதிக்கு ஏற்பட்டது அப்படியே நடந்தது, அவர் யாரென சொல்லிக்கொள்ளவே இல்லை. மிகவும் வற்புறுத்திக் கேட்டபோது ஏதோ பெயர் சொன்னாராம், முருகபூபதி சொன்ன அதே பெயர்போல்தான் இருந்தது, ( நண்பர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார், திரும்பவும் அவரிடம் அந்தப் பெயரைக் கேட்டுச் சொல்கிறேன்). இதில் விஷேசம் என்னவென்றால் எனது நண்பர் சென்றது புனைப்பெயரில், அவரின் அந்தப் புனைப்பெயர் பற்றி அவருக்குத் தெரிந்த நண்பர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவேளை தெரிந்தவராக இருந்துவிட்டாலும் நண்பருக்கு மட்டும் தெரிந்தவற்றை அவரால் எப்படிக்கூறமுடியும்??. ஆனால், அந்த மர்மநபர் சொன்ன அனைத்தும் உண்மை, அத்தனை பேரில் ஏன் அந்த நண்பரை மட்டும் தெர்ந்தெடுத்துப் பேசினார் என்று ஆரம்பித்து வரும் பல கேள்விகளுக்கும் பதிலே இல்லை.
அறிவியல் உலகத்தில் அதுவும் அறிவியல் ஆய்வில் இருக்கும் ஒருவனே, இதுபோல் பகுத்தறிவுக்குச் சம்பந்தமில்லாத மூடநம்பிக்கைகளைப் பரப்புவதா என்று நம் நண்பர்கள் சிலர் என்மேல் பாயக்கூடும் என்பதை நன்றாக அறிந்தே இதைப் பதிக்கிறேன் :-)).
சரி. இதேபோல் நம் நண்பர்கள் யாருக்காவது மிக அதிசயமான நிகழ்வுகள், அறிவியல்படி புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகள் நடந்ததுண்டா ? என்று அறிந்துகொள்ளவும் ஆசை.
| | |

Comments:
hmmm interesting..
indha maadhiri edhuvum enakku nadandhathillai....aanaal de ja vu maadhiri siladhu nadakum....as though you have experienced it before madhiri!!!! edhu amaanushyam mudan serka mudiyuma theriyala
Radha

அப்படியா..? ஆச்சரியமா இருக்கே முத்து! உங்க நண்பர்கிட்டே கேட்டு எனக்கு மடல் அனுப்புங்க. ஆனா இதில என்ன விசேஷம்னா நானே ஜாதகம், ஜோதிடம் இதையெல்லாம் நம்புறவனில்லை. ஆனால் எனக்கே நடந்ததுதான் ரொம்ப ரொம்ப ஆச்சரியமான விசயம்.
அன்புள்ள முத்து
இந்த மாதிரி அனுபவம் எதுவும் கிடையாது. ஆனால் 'ஐ சிங்' விளையாடியதுண்டா? இது
சீனர்கள் ஆருடம். நடக்கப் போவதை நம் ஆழ் மனமே நம்க்குச் சொல்லும். திருப்பித் திருப்பிக்
கேட்டால், ஒரு தடவை சொன்னேன், திரும்ப திரும்ப கேட்காதே என்று கூட சொல்லி விடும்.
அன்புடன்
சாம்

பாரதி,
இங்கே எனக்குச் சரியாக வேலை செய்கிறதே. எதற்கும் IE ல் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன். (http://murugapoopathi.weblogs.us/archives/37).
அவருக்கு நடந்தது என்னவென்றால் சம்பந்தமே இல்லாமல் திடீரென ஒருவர் முருகபூபதியைச் சாட்டில் சந்தித்து அவர் வாழ்க்கையில் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எனக் கூறியிருக்கிறார். அனைத்துமே உண்மை. சுருக்கமாகச் சொன்னால் இதுதான். மீதியை அந்தச் சுட்டியில் பாருங்கள்.

Angel,
Nice to hear your experience. May be i wish to try with you. I tried to give a comment on your blog, but it says "commmets are allowed only for your blog members". If you change in the comment moderation status i could be able to give my views and ideas in your feedback form-your blog.

சாம்,
சுவாரசியமாய் இருக்கிறதே. நீங்கள் சொல்வதை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஏதாவது சுட்டி இருக்கிறதா?. கொஞ்சம் விளக்கமய்ச் சொல்ல முடியுமா?. நீங்கள் இதுவரை முயற்சித்ததுண்டா?.

முருகபூபதி,
எனது நண்பரிடம் கேட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். என்னாலும் நம்பவே முடியவில்லை. உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள் :-).

ராதா ஸ்ரிராம்,
/// de ja vu maadhiri/// டிஜேவு என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லையே.
இதுபோல் உள்ளுணர்வால் முன்னடப்பதை அறிவது அமானுஸ்யமானதா என்று திரும்பவும் யோசிக்கத்தான் வேண்டும். ஆனாலும் அறிவியல் பூர்வமாய் இதை விளக்க இயலாதுதானே?.

http://www.interleaves.org/~rteeter/IChing/
இங்கே கொஞ்சம் பாருங்க.
அன்புடன்
சாம்
ஆருடம் என்பது பல கலாசாரங்களில் இருக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும், ரூன்ஸ், டாரோ
போன்றவற்றை, சூனியத்துடன் சேர்த்து விட்டது சமுதாயம். அலெக்ஸாந்தரைப் பற்றிச் சொல்லும்
போது, அவர் டெல்ஃபி என்ற இடத்துக்கு சென்று ஆருடம் கேட்டதாகச் சொல்வார்கள்.
http://news.nationalgeographic.com/news/2001/08/0814_delphioracle.html

muthu.....deja vu nna edhavadhu oru nigazhchi naddkarapo namakku erkanave adhu nadandha maadhiri oru feeling varum......aanaal adhu nadakaamalum irundhirukkalaaam.....i dont know if i ve given the right explanation....please check webster online also for better understanding
Radha
Radha
ராதா,
தகவலுக்கு நன்றி.ராதா,
இதற்கு முன்னால் இ.எஸ்.பி பற்றிக் கேள்விபட்டிருக்கிறேன். நான் தேடிப்பார்க்கிறேன்.

வணக்கம் ராதா ஸ்ரீராம், முத்து,
தங்கள் வலைப்பதிவை தங்கள் நண்பர் ஜான்போஸ்கோ கொடுக்க, வந்து பார்த்தால் மிக அருமையாக இருக்கின்றது...அருமையாக வளர்த்துவருகின்றீர், வாழ்க வளமுடன் முத்து, மேலும் ராதா ஸ்ரீராம் அவர்களின் வலைப்பதிவு முகவரி என்ன? அதில் ஒன்றுமே காணவில்லை??? அந்தப்பெயரில் எனக்கு ஒரு தோழி உள்ளார், தங்களைப்பற்றி அறிந்துகொள்ளலாமா?
வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்களுடன்,
ஸ்ரீஷிவ்..

வணக்கம் ஸ்ரீஷிவ். உங்கள் மறுமொழிக்கு நன்றி. ராதா ஸ்ரீராம் வலைப்பதிவு முகவரி சரியாக வேலை செய்யவில்லை. அவ்வப்போது இந்த வலைப்பதிவுக்கு வருவார். அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸில் இருக்கிறார், வேறு எதுவும் எனக்கு அவ்வளவாய்த் தெரியாது.
பகுத்தறிவுக்கு சம்பந்தமில்லை என்பதால் சற்று சங்கடமாக இருந்தாலும், இன்று வரை நான் அவியுடன் பேசி வருகிறேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
முப்பது வயதில் அகால மரணமடைந்த என் சொந்த அண்ணனின் ஆவியுடனே நான் பேசி வருகிறேன்.
ஆனால் அது ஆவியாக இருக்கக்கூடாது என்பதற்காக பல சோதைனைக் கேள்விகளை கேட்பேன்.ஒவ்வோரு முறையும் வருவது என் சகோதரரின் ஆவி என்பதை நிருபிப்பது போல் எதாவது ஒரு பழைய சம்பவத்தை சொல்லிவிட்டு போகும். என்னுடைய மனைவியை தான் நான் "மீடியமாக" பயன் படுத்துகிறேன்.
இதற்கு மருத்துவரீதியாக ஒரு விடையை தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னை பொருத்தவரை ஆவி என்று இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.
மேலும் பல விதமான அமானுஷ்ய அனுபவங்கள் பல உள்ளன. எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும் என்பதால் கண்டதையும் இங்கு இட்டு உங்களை வீணாக குழப்பப் போவதில்லை.
நன்றி.
email: kanchifilms@yahoo.co.in

காஞ்சி பிலிம்ஸ்,
மறுமொழிக்கு நன்றி. வாங்க நல்லா இருக்கீங்களா?, பார்த்து எவ்வளவு நாளாச்சு.
////என்னை பொருத்தவரை ஆவி என்று இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.///
பார்த்தீர்களா?. பல வருடங்கள் நேரடியாய் அனுபவப்பட்ட நீங்களே இவ்வாறு கூறும்போது மற்றவர்களை என்ன சொல்வது?. ஆவி போன்ற அமானுஷ்ய விஷயங்கள் அறிவியலுக்கு அப்பால் இருப்பவை. அவற்றை அறிவியல்பூர்வமாய் ஆராய்வது சாத்தியம்தான். ஆவி என்பது கட்டுக்கதை என்று தூரத்திலே இருந்து வெட்டித் தர்க்கம் பேசிக்கொண்டிராமல் நேரடியாய் அதில் என்னதான் இருக்கிறது பார்ப்போமே என்று இறங்கி உங்களைப்போல் ஆராய்பவர் வெகு சிலரே. அறிவியல் இதுபோன்றவற்றை விளக்க அது இன்னும் சில பரிமாணங்களைப் பெறுவது மிக அவசியம். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும் கதையாய் தமக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்து அதற்கு அப்பாற்பட்ட ஒன்றை ஆராய்வது இயலாதது.
///இதற்கு மருத்துவரீதியாக ஒரு விடையை தேடிக் கொண்டிருக்கிறேன். ///
அது காதால் ஒளியைக் கேட்க முயல்வது போலவும், கண்ணால் ஒலியைப் பார்க்கத் துடிப்பதுபோலவும், சுவையை விரலால் தொட்டு உணர நினைப்பதுபோலவும் ஆகிவிடக்கூடும். நம் புலன்கள் காண்பது உண்மை. புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்திகள், விஷயங்களும் பல உள்ளன என்பதை உணர்ந்துகொள்வதிலிருந்தே ஒருவன் அறிவாளியாக ஆரம்பிக்கிறான். அதை அவன் இல்லையென மறுப்பதால் பெரிய தீமை என எதுவும் இல்லைதான். ஆனால் உண்மை என உணர்ந்து அதைப்பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம். உதாரணமாய், உங்களின் அண்ணனுடன் மீண்டும் தொடர்புகொள்ள இன்றைய அறிவியல் உதவுமா?. இன்றைக்கு அது சாத்தியமில்லை. அது உங்களுக்குச் சாத்தியமானது இன்றைய அறிவியலால் இல்லை. மேலும் உங்களுக்கு ஊடகமாய்ச் செயல்படும் சக்தி இல்லையென்றாலும்கூட அடுத்தவர் மூலம் முயன்றது உங்களின் தீரஆராயும் திறனையே காட்டுகிறது. உங்களைப் போலவே தீர ஆராயும் எண்ணம் இருந்தால் ஒவ்வொருவரும் அவரவராகவே பலவற்றை உணர்ந்துகொள்ளலாம். இல்லையென்றால் அப்படி எதுவும் இல்லை, எல்லாம் கட்டுக்கதை என்று ஆற்றையும் பார்க்காமல் அழகரையும் பார்க்காமல் தர்க்கம் பேசலாம். அ.அ களின் பிரச்சினையும், பலமும் இதுதான். அறிவியல்போல அனைவருக்கும் பொதுவாக இருப்பதில்லை, சிலருக்கு அந்தச் சக்தி குறைவாக/இல்லாமல் இருக்கிறது.
மேலும் ஒன்று கேட்க நினைக்கிறேன், நீங்கள் எந்த முறையில் தொடர்புகொள்கிறீர்கள்?. ஒய்ஜா பலகை, ஆட்டோ ரைட்டிங், நேரடியாய்ப் பேசுவது இவற்றில் எந்த முறையைக் கையாள்கிறீர்கள்?.
Post a Comment