<$BlogRSDUrl$>

Thursday, March 16, 2006

பிறப்பு விகிதம் - அபாயத்தில்

எதிர்பார்த்ததைவிடவும் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. இது கவலைதரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாய்ச் செய்திகள் கூறுகின்றன. மக்கள்தொகை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்று இதை வெளிப்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் 2050 ல் இன்று இருக்கும் குழந்தைகளைப்போல் பாதிதான் அன்று இருக்குமாம். உடனே அவசரப்பட்டு இது இந்தியாவிலா என்று நினைத்துவிட வேண்டாம். இது ஜெர்மனியைப் பற்றியது.

ஸ்பீகல் என்ற இணைய இதழில் வந்த கட்டுரை இங்கே. இது ஜெர்மனில் இருப்பதால் ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ள விரும்புவர்கள் கூகிள்துணையுடன் படிக்கலாம். சில மாநிலங்களில் பிறப்புவிகிதம் உலகிலேயே மிகக் குறைவான அளவாய் உள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பமுடைய பெண்களும், பெற்றோர்களும் குறைந்துகொண்டே வருவதற்கு வேலையில்லாத் திண்டாண்ட விகிதம் அதிகரித்துவருவதே முக்கியக் காரணம் என்று கருதுகிறார்கள் ( அப்படிப் பார்த்தால் இந்தியாவில்...?). நிலையான மக்கள்தொகை இருக்க குறைந்தபட்சம் 2.1 பிறப்பு விகிதம் இருந்தாக வேண்டும். ஜெர்மனியில் அதைவிடவும் மிகக்குறைந்த பிறப்புவிகிதம் இருப்பதே கவலைப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தக் கட்டுரையில் இல்லாத, எனது சொந்தக் கருத்து ஒன்று இங்கே. இந்த அளவுக்குப் பிறப்பு விகிதம் இருப்பதற்குக்கூட துருக்கி மக்கள் இங்கே அதிகம் பேர் குடியுரிமை பெற்றிருப்பது காரணமாய் இருக்கலாம், இல்லாவிட்டால் இதைவிடவும் குறைவாகவே பிறப்புவிகிதம் இருந்திருக்கும். இதைப் பற்றி இன்னொரு முறை எழுத நினைத்திருக்கிறேன்.
| | |
Comments:
//இதே நிலை நீடித்தால் 2050 ல் இன்று இருக்கும் குழந்தைகளைப்போல் பாதிதான் அன்று இருக்குமாம். உடனே அவசரப்பட்டு இது இந்தியாவிலா என்று நினைத்துவிட வேண்டாம். இது ஜெர்மனியைப் பற்றியது.//

இது ஏதோ நக்கல் மாதிரி தெரிகிறது. :-))

நீங்கள் சொல்வது மிகவும் சரி. துருக்கி நாட்டவர்கள் இங்கு இருப்பதால்தான் ஒரளவேனும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பருவாயில்லாமலிருக்கிறது.
 

முத்துத் தம்பி ,

நல்லா இருக்கீங்களா?

யோசிக்க வேண்டிய பதிவுதான்.
 

நம்ம தான் இங்க பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஏதாவது செஞ்சாகுனும் போல....!!!
 

தர்ஷன்,
நக்கல் இல்லை. சும்மா ஒரு டிஸ்க்ளெய்மர் மாதிரி அவ்வளவுதான் :-).
துருக்கி மக்கள் சாதாரணமாய் 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் 2 குழந்தை இருந்தாலே ஜெர்மானியர்கள் பெரிய குடும்பம் என்கிறார்கள்.
 

துளசியக்கா,
நான் நல்லாயிருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா?. ஊருல ஒரு மெகா டூர் அடிச்சிட்டீங்க போல தெரியுது.

நியூசிலாந்தில் இதுபோல் பிறப்பு விகிதக்குறைவு பிரச்சினை வரவில்லையா ?
 

ஜான் போஸ்கோ,
ஓ... கதை அப்படிப்போகுதா?. இரு அங்க சொல்லி உனக்கு உதைவிடச் சொல்கிறேன் :-).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com