<$BlogRSDUrl$>

Wednesday, March 15, 2006

செந்தில் - கருணாநிதி போட்டி ??

நடிகர் செந்தில் கருணாநிதிக்குச் சவால் விட்டுள்ளார். அவரை எதிர்த்து கருணாநிதி போட்டியிட்டால் என்ன நடக்குமென்று சொல்லியுள்ளார். டெபாசிட் போய்விடுமென்று தெளிவாகவே சொல்லியுள்ளார், ஆனால் யாருக்கு என்று சரியாக சொல்லவில்லை. எது எப்படியோ, செந்தில் நல்ல நகைச்சுவை நடிகர்தான், ஆனால் அதற்காய் தேர்தல் பிரச்சாரத்தில் தனது நகைச்சுவை உணர்வை இப்படிக்காட்டுவது நன்றாகவா இருக்கிறது :-).
| | |
Comments:
அட நீங்கள் வேற?
முடிந்தால் கருணாநிதி செந்திலை எதிர்த்து ஒரே தொகுதியில் போட்டியிட்டுத்தான் பார்க்கட்டுமே?;-)
அவர் அப்படிச் செய்யமாட்டாரென்று செந்திலுக்கு நன்றாகத் தெரியும். அதுதான் இந்தச் சவால்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
 

வசந்தன்,
விஷயம் என்னவென்றால் அப்படியாவது நமக்கு ஒரு சீட்டு தந்துவிடமார்களா என்ற நப்பாசைதான் :-)).
 

முத்து

இந்த மாதிரி நகைச்சுவை கூத்துக்களை தேர்தல் சமயத்தில் தானே பார்க்க முடியும்.

கலைஞரே இதை கேட்டு சிரித்திருப்பார்.

தேர்தல் சமயத்தில் யானையும் கொசுவும் ஒன்றாகவே பேசப்படுவார்கள்.
 

பரஞ்சோதி,
தேர்தலில் நிற்கவே செந்திலுக்குச் சீட்டு கிடைக்குமோ கிடைக்காதோ?, மேலும், கருணாநிதியை எதிர்த்து அதே தொகுதியில் நிற்க ஜெயலலிதாவே துணிவாரோ இல்லையோ, நிலைமை இப்படி இருக்க நம்ம செந்தில் இப்படிப் பேசினால், அவரது நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
 

முத்து,

தமாசுக்கு கூட இப்படி சொல்லாதீங்க..அ.தி.மு.க வில சீட் கிடைத்தாலும் கிடைக்கும்..எந்த அளவிற்கு கலைஞரை தரம் தாழ்ந்து தீட்டறாங்களோ அல்லது எந்த அளவிற்கு அம்மா கால்ல விழும்போது நெடுஞ்சாண்கிடையாக விழறாங்களோ அந்த அளவிற்கு அ.தி.மு.க வில் லாபம் தான்.
 

முத்து,
நீங்கள் சொல்வதும் சரிதான், ஒருவேளை செந்திலுக்குச் சீட் கிடைத்து அவரும் சட்டசபைக்குப் போய்த்தான் பார்க்கட்டுமே :-). ஏற்கனவே சட்டசபையில் பல கூத்துகள் நடக்கின்றன, அதைவிட பிரமாதமாய் என்ன செய்துவிடப்போகிறார்.
 

Bernard Shahவின் " Politics is the last refuge of scoundrals" என்கிற மேற்கோள் நினைவிற்கு வந்தது!
 

ஸ்ரீதர்,
நம்ம ஊரில் மட்டும்தான் இப்படி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உலகம்பூராவும் இப்படித்தானோ? :-)).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com