Thursday, February 16, 2006
உலகம் தோன்றி இதுவரை....
மனிதன் தோன்றி 6,000 வருடங்கள் ஆகின்றன. நான் சொல்லவில்லை, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் என்னுடன் வாதிட்ட கிருத்துவ போதகர் சொன்னார். அவ்வப்போது சிலர் இதுபோல் வீடுதேடிவந்து போதனை செய்வதுண்டு. அன்று வந்தவர் தமிழர். அவருடன் பேசியது சுவாரசியமாகவே இருந்தது. போதனை செய்ய வந்து இப்படி வாதம் செய்ய வேண்டியதாகிவிட்டதே என்று அவர் வருத்தப்பட்டாரோ என்னவோ தெரியவில்லை, அதன் பின்னர் அவரை மீண்டும் பார்க்கவே இல்லை. ஆதாம் ஏவாளில் இருந்து இன்றைய மனிதர்கள்வரை கணக்கிட்டால் கடவுள் மனிதனைப் படைத்து ஆறாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று உறுதியாகச் சொன்னார். மொஹஞ்சதாரோ, ஹராப்பா நாகரிகத்தின் காலமே 5,000 ஆயிரம் வருடத்துக்கு மேல் ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கும் ஆயிரம் வருடத்துக்கு முன்னால்தான் இறைவன் மனிதனைப் படைத்தார் என்றார். இது கொஞ்சமும் ஏற்கும்படி இல்லையென்று சொன்னேன். இப்படியே விவாதம் ஒருமணி நேரத்துக்கு மேல் தொடர்ந்தது. அது சரியோ, தவறோ ஒரு புறமிருக்கட்டும். புராதன இந்தியக் காலண்டரைக் கொஞ்சம் பார்க்கலாம்.
60 தற்பரை - 1 விநாடி
60 விநாடி - 1 நாடி
60 நாடி - 1 நாள்
29-32 நாள் - 1 மாதம்
12 மாதம் - 1 வருடம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை)
யுகம்-
கிருதயுகம் 4 X 4,32,000 = 17,28,000
திரேதாயுகம் 3 X 4,32,000 = 12,96,000
துவாபரயுகம் 2 X 4,32,000 = 8,64,000
கலியுகம் 1 X 4,32,000 = 4,32,000
யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பெப்ரவரி 18, 3102 BCE ல், ஆக இந்த 2006 ஆம் வருடம் கலியுகத்தில் 5106 ஆம் வருடம் ஆகின்றது. கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,30,000 வருடம் இருக்கின்றது. கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.
நான்கு யுகமும் சேர்ந்தால் ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் = 4.32 மில்லியன் வருடங்கள்.
71 மகாயுகம் = 1 மன்வந்திரம்
14 மன்வந்திரம் = 1 கற்பம் (994 மகாயுகம்)
2 கற்பம் = பிரம்மாவின் 1 நாள்
இப்படியே பிரம்மாவுக்கு 100 வயது ஆனால் அவரின் ஆயுள் முடிந்து அடுத்த பிரம்மா ஆட்சிக்கு வருவார்.
ஆக, இதன்படி உலகம் தோன்றி எத்தனை வருடம் ஆனதோ?, இப்போது இருக்கும் பிரம்மா எத்தனையாவது பிரம்மாவோ தெரியவில்லை. எனக்கு இப்போது கொஞ்சம் தலைசுற்றுகிறது.
| | |

Comments:
முத்து. சடங்குகள் செய்வதற்கு முன் சொல்லும் வடமொழி சங்கல்ப மந்திரத்தில் இப்போது இருக்கும் நான்முகப் பிரம்மாவிற்கு 50 வயது முடிந்து 51வது வயதின் முதல் நாளின் பகல் நேரம் நடந்துக் கொண்டிருப்பதாக வருகிறது.
According to what i read ,the age of bhrama is like 100 years
wih 365 days making a year. one day in bhrama life is equal to 100 years in human life..
--arun

Arun,
I don't think so. one day of brahma is 2 kalpam. 1 kalpam is a night or day to him. 1 kalpam is about 4.5 billion years.

மனிதனின் வயது என்ன?
மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என ஒரு சிலரும் சில லட்சம் ஆண்டுகளாயிற்று என வேறு சிலரும் ஏறக்குறைய 6000 ஆண்டுகளாயிற்று என மற்றும் சிலரும் கூறுகின்றனர்.
இதே வாக்குவாதம் திரு.மூத்துக்கு ஒரு மத போதகரிடம் ஒருமணி நேரமாய் ஏற்ப்பட்டுள்ளது.தன் வாதத்தை திரு.மூத்து அவர்கள் விளக்காவிட்டாலும் அவர்கள் வாதம் என்னமாய் இருந்திருக்கும என யூகிக்க முடிகிறது. இன்னொருவர் அப்படி பட்டவர்களை வீட்டில் ஏற்றாதே என அறிவுரைக்கிறார்.ஏன்? நான் கேட்பது என்னவென்றால் ....உங்கள் நியாயமான வாதங்களை அறிவியல்,சரித்திர பூர்வமாக வைக்கலாமே.
இதுவரை உலக சரித்திரத்தில் beyond 6000 years-க்கு back போக முடிந்ததுண்டா.ஆறாயிரம் ஆண்டுவரைக்கும் நம்மால் back trace பண்ணமுடியும் போது ஏன் அதையும் தாண்டி செல்ல முடியவில்லை.ஏன் ஓர் வெற்றிடம்.
Indus Valley Civilization (3300–1500 கிமு) வரைக்கும் என சொல்கிறோமே.அதற்க்கு முன்னால் என்ன?....
கிறிஸ்தவர்கள் (மட்டுமல்ல முகமதியர்கள்,யூதர்கள் கூட )சொல்வது கிமு 4000 ஆண்டுகள்+கிபி 2000 ஆண்டுகள்- ஆகமொத்தம் ஏறத்தாழ 6000 ஆண்டுகள்.
சிலர் சொல்வது போல மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என்றால் மில்லியன் ஆண்டுகளாகியும் மக்கள் தொகை இப்படியா இருந்திருக்கும்.பூமி தாங்காமல் போயிருக்குமே.
பழங்காப்பியம் திருக்குறள் 2000 ஆண்டு முந்தையது.தொல்காப்பியம் 5000 ஆண்டுகள் முந்தையது.எட்டுவதெல்லாம் ஏன் 6000 க்குள்ளாகவே இருக்கவேண்டும்.
மற்றபடி பெரிய நம்பர்கள் சொல்லுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.சைபர் போட போட எண்கள் கூடும்.இந்த மாதிரி விசயங்களில் யாரும் எக்ஸ்ரா சைபர் போட தயங்குவதில்லை.
ஆரோக்கியமான விவாதம் நமக்கு நல்லதே..

thoma4india,
மறுமொழிக்கு நன்றி தோமா. முதலில் ஒரு வார்த்தை. இது மதசம்பந்தமான விவாதமாக் ஆகிவிடக்கூடாது என நான் கவலைப்படுகிறேன். எதையும் த்னிப்பட்ட தாக்குதலாய் எடுத்துக்கொள்ள வேண்டாம். பல்வேறு நம்பிக்கைகளைப் பற்றி உலகின் வயதைப் பற்றிய நம்பிக்கைகளைப் பற்றி ஒரு சின்ன அலசல் அவ்வளவே. டேக் இட் ஈஸி. ஏதாவது ஒரு மதத்திற்கு ஆதரவாக அல்லது எதிராகவோ நான் எனது பதிவு இருப்பதாய் நினைத்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். திரும்ப ஒரு முறை படித்துப் பாருங்கள்.
இனிமேல் கொஞ்சம் அறிவியல்பூர்வான விவாதத்துக்கு வருவோம். எந்த மதம் சொல்வதையும் இங்கே நாம் கலக்க வேண்டாம். நம்மிடம் கிட்டத்தட்ட ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் வருடத்துக்கு மேல் வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் இல்லை. ஆனால் அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்று சொல்ல இயலாது. குமரிக் கண்டம் இருந்ததாய்ச் சொல்லப்படுவது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால். கற்கால மனிதர்கள் வாழ்ந்தது கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளை ஒட்டி, இது அறிவியல்பூர்வாய்த் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டைனோசர்கள் வாழ்ந்தது 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னால். இதுவும் மிக உறுதியாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதனின் சடலம் கூட கண்டுபிடிக்கப்பட்டதாய் ஞாபகம் (தற்போதைக்கு அதுதான் அதிக வயதான மனிதனின் சடலம் என்று நினைக்கிறேன்). டைனோசார்கள் காலத்தில் மனிதர்கள் இருந்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் அன்று உலகம் இருந்தது, பல உயிர்களும் இருந்தது, இதுவும் தெளிவாய் நிரூபிக்கப் பட்ட உண்மை.

தங்களுடைய கணக்கில்,
60 விநாடி = 1 நாடி
60 நாடி = 1 நாள் (--> ஒரு மணி தானே?)
எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தட்டச்சுப் பிழை என நினைக்கிறேன்.
சிலகாலம் முன் National Geographic'ல், மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த தொடரைப் பார்த்தேன். மனித இனம் தோன்றி குறைந்தது 65,000 ஆண்டுகள் இருக்கும் எனக்கேட்ட நியாபகம்.
-அனிதா

///தங்களுடைய கணக்கில்,
60 விநாடி = 1 நாடி
60 நாடி = 1 நாள் (--> ஒரு மணி தானே?)///
அனிதா,
மறுமொழிக்கு நன்றிகள். 60 நாடி அல்லது 60 நாழிகை என்பதை (பழைய நம்மூர் நேரக்கணக்குப் படி) 1 நாள் என்கிறோம். இப்போதைய நேரக்கணக்குப் படி 2.5 நாடிகை அல்லது நாடி என்பது இன்றைய ஒரு மணிநேரத்துக்குச் சமம். அந்தக் கால விநாடியும் இப்போது நாம் சொல்லும் செகண்ட்டும் ஒரே அளவுடையது அல்ல.
மேலும், நாம் நாள் அல்லது கிழமையைக் குறிப்பதில் இன்னும் கொஞ்சம் வித்தியாசங்கள் உண்டு. ஆங்கில முறைப்படி இரவு 12 மணிக்கு மேல் அடுத்த நாள் ஆரம்பிக்கும். நமது கணக்குப்படி, சூரியன் கிழக்குத் திசையில் உதிக்கும்போது அடுத்த நாள் உதயமாகிறது. உதாரணமாய், மேற்கத்திய முறையில், இங்கு இப்போது 23 மார்ச் 2006, 22.03 மணி, வியாழக்கிழமை, இன்னும் இரண்டு மணிநேரத்தில் இங்கே வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கும். ஆனால் நமது முறைப்படி, காலையில் நான் இருக்கும் இவ்விடத்தில் சூரியன் உதயமாவது காலை 6:30:40 க்கு எனவே காலை ஆறரைக்குத்தான் வெள்ளிக்கிழமை பிறக்கிறது.
நேஷனல் ஜியோக்கிராபியில் நீங்கள் பார்த்த தகவல் எனக்குப் புதிது. நன்றி.

நிச்சயமாக, இன்னும் சொல்லப்போனால் நவீன விஞ்ஞானம் வந்தது இந்த 200 வருடத்துக்குள்தான். 200 வருடத்தில் என்னென்னவோ நடந்துவிட்டது. அடுத்த 50 வருடத்தில் என்னவெல்லாம் வரும் என்றுகூட நம்மால் கற்வனை செய்து பார்க்க முடியவில்லை. 20 வருடத்துக்கு முன்னால் இப்படி அவரவர் வீட்டிலிருந்து, நியூசிலாந்திலிருந்து நீங்களும், ஜெர்மனியில் இருந்து நானும் இப்படி சர்வசாதாரணமாய் உரையாடிக்கொள்ள முடியும் என யாராவது கற்பனையிலாவது நினைத்திருப்போமா?. :). உலகத்துல என்னென்னமோ நடக்குது.
நன்றி முத்து.பொறுமையாக பதிலளித்துள்ளீர்கள்.Hope you had the same kind of discussion with him too.எந்த மதத்தையும் நான் இங்கு இழுக்கவில்லை.இழுக்க விரும்பவும் இல்லை.ஆரோக்கியமான விவாதம் தேவை.கதவை மூடி வெளியே தள்ளு என்றிருக்க கூடாது என்பதை வலியுறுத்தவே விரும்பினேன்.Thanks again.
Post a Comment