<$BlogRSDUrl$>

Monday, January 10, 2005

தமிழ் வலைப்பூக்களில் ஒரு புதிய முயற்சி


தமிழ் வலைப்பூக்களில் ஒரு புதிய முயற்சியாக பதிவுகளை PDF கோப்பாக(மின்னூல் ? ;) ! ) மாற்றிவைத்தால் அது வலையில் இருப்பதைவிட இன்னும் கொஞ்சம் பயனுடையதாகவும், எடுத்தாள எளிதாகவும் இருக்குமென்ற காரணத்தால் முதல் பதிவிலிருந்து சென்ற ஏப்ரல் வரையானவற்றை PDF கோப்பாக மாற்றி வைத்துள்ளேன். அப்படி இங்கு என்னதான் இருக்கிறது எனறு பார்க்க விரும்பும் நண்பர்கள் தாராளமாய் இலவசமாய் ( !) இறக்கிப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பதிவுகளை மீண்டும் திருத்தாமல் அப்படியே PDF கோப்பாக மாற்றியபடியால் சில எழுத்துப் பிழைகள் எங்காவது இருக்கலாம். இது முற்றிலும் இலவசமாகவும், தனிப்பட்ட உபயோகத்துக்கும் மட்டுமே. :)


| | |
Comments:
நல்ல முயற்சி முத்து. HTML இன்புட்டாகக கொடுத்து நீங்கள் இதை உருவாக்கியிருக்கீறீர்கள் என நினைக்கிறேன். அடோப் பிடிப் ரைட்டர் யூனிகோட் ஃபான்டை கண்டுபிடிக்கிறதா? எனக்கு யூனிகோட் உள்ள HTMளL-ஐ உள்ளிட்டால் ஜங்காக வருகிறது. கொஞ்சம் தெளிவுபடுத்துகிறீர்களா?
 

விஜய்,
நீங்கள் சேமிக்கும்போது UTF-8 என்கோடிங் முறையில் சேமிக்கவேண்டும். சாதாரணமாக ANSI என்கோடிங் தேர்வாகியிருக்கும். அதனால் தமிழ் எழுத்துரு சரியாகத் தெரியாது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com