<$BlogRSDUrl$>

Tuesday, January 04, 2005

பூமி - நேற்று இன்று நாஆஆ....ளை


பல்லாயிரம் மக்களைப் பலிகொண்ட சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின்விளைவாக பல சிறுதீவுகள் கொஞ்சதூரம் இடம் மாறிவிட்டனவாம். அந்தமான் தீவு 32 மீட்டர்வரை நகர்ந்துவிட்டதாய் அறியப்பட்டுள்ளது.நமக்கு இது ஆச்சரியமாய் இருந்தாலும் இயல்பில் இது ஒன்றும் மிகப் புதியதல்ல.

இமயமலை இன்று இருக்குமிடம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடலாய் இருந்தது.ஆப்பிரிக்காவும் அமெரிக்காவும் ஒன்றாக இணைந்திருந்த காலமும்கூட உண்டு. இவ்வாறு பெருநிலப்பரப்பு நகர்வதைக் "கண்ட நகர்வு" என்பர். இதுபோன்ற நகர்வுகள் இன்றுவரை நடந்துகொண்டுகொண்டுதான் இருக்கிறது.

இன்னும் சில கோடி ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியக் கண்டம் அருகிலுள்ள கண்டத்துடன் இணைந்துவிடுமாம்.ஆப்பிரிக்கக்கண்டம் இரண்டாகப் பிரியும் என்று நம்பப்படுகிறது.இன்று நண்பர் ஒருவர் ஆப்பிரிக்கக்கண்டம் பிளவுபடுவது சில பத்தாண்டுகளிலேயே தெரிய ஆரம்பிக்கும் என்கிறார். இங்கே நீங்கள் படங்களில் பார்ப்பது புவியின் நேற்று இன்று நாளை. படத்தைக் கொஞ்சம் பெரியதாய்ப் பார்க்க அதனைச் சொடுக்கவும்.
படங்கள்: spiegel.de
| | |
Comments:
Muthu Sowkiyamaa?
 

மூர்த்தி,கார்த்திக்ரமாஸ்,
நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க..
 

கண்டங்கள் நகர்வதை முன் கூட்டியே அறிய ஏதேனும் வழி இருக்கிறதா?. நான் பூகம்பம், சுனாமியை முன்பே அறியும் முறையை இங்கு கேட்க வில்லை.
 

unga pathivai paarththathum padikaamale comment podaren.
Nalla irukeengalaaa?. Ungalai meendum paarkka mahilchiyaai ullathu.
Ippo unga blog-a padikka poren.. :)
 

கங்ஸ்,
கண்டங்கள் நகர்வது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல என்றே நினைக்கிறேன். பூகம்பமும், நகர்வும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எந்த திசையில் கண்டங்கள் நகரும் என்பது கணிக்கக்கூடிதே. இதுபற்றி மேலும் தகவல் தெரிந்தால் எழுதுகிறேன்.
 

பாலாஜி,
உங்க கமெண்டைப் பார்த்தேன். சந்தோஷம். நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க ..?
கொஞ்ச நாளா எழுதமுடியலை. புது வருஷத்துல திரும்பவும் எழுத ஆரம்பிச்சுருக்கேன்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com