<$BlogRSDUrl$>

Monday, December 15, 2003

ராமன் கட்டிய ஆதாமின் பாலம் ..... ?

புராண காலத்தில் ராமன் இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையே பாலம் கட்டி சீதையை மீட்டதாய் நாம் அனைவரும் ராமாயணத்தில் படித்திருக்கிறோம். அதனோடு தொடர்புடைய ஒரு கட்டுரையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆதாரங்களுடன் சமீபத்தில் வெளியிட்டது. தற்போதைக்கு அப்பாலம் நாசாவால் "ஆதாமின் பாலம்" என பெயர்சூட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வுச் செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய புகைப்படம் ஒன்றின் மூலம் கண்டறியப்பட்ட இந்தியாவுக்கும், இலங்கைக்குப் இடையேயான இப்பாலம் பல ஆர்வமிக்க ஆய்வுகளையும், சிந்தனைகளையும் தூண்டியுள்ளது.

பாலம் பற்றி ....

அந்தப் பாலம் சுமார் 30 கிலோ மீட்டர் நீளமுடையதாக இருக்கிறது. அதன் கட்டுமானப் பொருட்களும், பாலத்தின் அமைப்பும் அது மனிதனால் கட்டப்பட்டது என்பதை உறுதிசெய்கிறது. தொல்லியல்துறை ஆய்வுகள் மனிதனின் நடமாட்டம் இலங்கையில் சுமார் 1,750,000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதை முடிவுசெய்கிறது. இங்கு, ராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் திருதாயுகம் 1,700,000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


பாலத்தின் தோற்றம்.. செயற்கைக்கோள் அனுப்பிய படம்...






பாலத்தின் மிக நெருங்கிய தோற்றத்தின் நிழல் படம்.....




மேலே காணும் இப்பாலம்(?) ஒருவேளை ராமன், வானர சேனை, ஜாம்பவான், அனுமான் ஆகியவர்களுடன் அந்தச் சின்ன அணிலும் சேர்ந்து கட்டியதுதானோ...? இதற்கு விடை சொல்வது அவ்வளவு எளிதா என்று திரும்பக் கேட்கிறீர்களா ..? அதுவும் சரிதான்!.
இப்பாலம் பற்றிய அடுத்த பதிவு இங்கே
| | |
Comments:
காகா பிரியன்,
இதேபோல் ஒரு விஷயம் மேற்கத்திய நாடு ஏதாவது ஒன்றில் கிடைத்திருந்தால் இந்நேரம் அது பெரிய சுற்றுலாத்தலமாய் ஆகியிருக்கும். என்ன செய்வது. இப்பாலம் பற்றிய அடுத்த பதிவு இங்கே
 

நம்ம ஊர்ல நம்பிக்கைக்கா பஞ்சம். வேப்ப மரத்தில மாரியாத்தா வர்றதும், குளத்துக்கரையில பிள்ளையாரப்பாவும், ரோட்டு வளைவுல திடீர் அய்யனார்கள் தோன்றுவதும் மத நம்பிக்கைகள்னா, ராமர் பாலமோ, ஆதாம் பாலமோ, இன்னோரு மத நம்பிக்கையா இருந்துட்டுப் போகட்டும். அதுக்காக, நடுரோட்டுல சாமி சிலை இருந்தா ஒதுக்கமா சிலைக்கு இடம் கொடுக்குறதில்லையா அது மாதிரி, இந்த நம்பிக்கைக்கும் ஒரு பக்கமா ஒதுக்கிக் கொடுத்துட்டு, சேதுக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான் இந்தியதேசமாதாவுக்குச் செய்கிற வணக்கமாகும்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com