<$BlogRSDUrl$>

Saturday, May 13, 2006

லேடீஸ் ஹாஸ்டல் Vs ஆடவர் விடுதி

மகளிர் விடுதிச் சம்பங்கள் பெரும்பாலும் ஆடவர் விடுதியில் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதேபோல் ஆடவர் விடுதிச் சம்பங்கள் மகளிர் விடுதியிலும் முக்கியத் தலைப்புச் செய்தியே. அப்போது எனக்குக் கிடைத்துகொண்டிருந்த தகவல்களின்படி மகளிர் விடுதியிலுள்ளோர் ஆடவர் விடுதி மக்களிடமிருந்து அவ்வளவு பெரிதாய் வேறுபட்டவர்களே அல்லர். ஆனால், சில விஷயங்களில் சதவீதத்தில் பெரிய வேறுபாடு இருந்தது உண்மை. மகளிர் விடுதியில் நடக்கும் பெரிய சம்பவங்களை அறிந்துகொள்ளவெனத் தனியாக மினிஉளவுத்துறையே எனக்கு அவ்விடுதியில் அப்போது இருந்தது. என்ன நடந்தாலும் ஏஜண்டுகள் மூலம் உடனடியாய் வந்து சேர்ந்துவிடும் :-).

பல்கலைக்கழகத்தில் ஆண்கள் விடுதியும், பெண்கள் விடுதியும் கூப்பிடு தூரத்தில்தான் அருகருகே இருந்தன. அவ்வப்போது நோட்ஸ், புத்தகம் போன்றவைகளைப் பரிமாறிக்கொள்ள அங்கே செல்லவேண்டியிருந்ததால், விடுதிகள் அருகிலேயே இருந்தது வசதியாக இருக்கிறது என மக்கள் அடிக்கடி அபிப்பிராயப்படுவார்கள், நிஜமா அதுக்காகத்தாங்க.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து 3 வருடங்களைத் தவிர்த்து நான் படித்தது அத்தனையும் கோ-எஜுகேசன் தான். இதனாலேயே சின்ன வயதிலிருந்தே நான் பெரிதாய்ப் பாலின வேறுபாடு பார்த்ததே இல்லை. எனக்குச் சகவயதுடைய பையனும், பெண்ணும் 'கிட்டத்தட்ட' எனக்கு ஒன்றேதான். பசங்களிடம் பேசும் அத்தனையையும், பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியே தோழிகளிடமும் பேசுவது வழக்கம். தோழிகளும் கிட்டத்தட்ட அப்படியே. ஆனால், மற்ற பசங்களிடம் இதேபோல் பேசுவது இல்லை என்ற உண்மையே எனக்குக் கொஞ்சம் லேட்டாய்த்தான் தெரியவந்தது, இந்த உண்மை எனக்குத் தெரியவரும்போது சகதோழர்கள் பலர் எனக்குச் சகவிரோதிகளாய் மாறியிருந்தார்கள் :-).

இருவிடுதிகளிலும் நடப்பவற்றைப் பலவிஷயங்களில் ஒப்பிட முடியும். கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு சகட்டு மேனிக்குத் திட்டிக்கொண்டு திரியும் பசங்கள் போலவே, அங்கே நைட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ரவுடித்தனம் செய்யும் அம்மணிகள் அங்கும் உண்டு. தம், பீர் என வெளுத்து வாங்கும் அரிதான அம்மணிகள்கூட உண்டென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்(ஏன் கூடாது?, சமத்துவம் வெறும் பேச்சில் மட்டும் இருந்தால் போதுமா?). அந்த மாதிரி ஆண்களுக்கிணையான அம்மணிகளுக்கு லேடீஸ் ஹாஸ்டலில் 'தாதா' அளவுக்கு மவுசு உண்டாம், நிறைய பொண்ணுங்க 'தாதா'க்களுடன் பேசவே பயப்படுவாங்களாம். நம் ஏஜண்டுகள் இந்த மாதிரித் தகவலைச் சொல்லும்போது கவனமாகக் காதில் வாங்கிக்கொள்வது வழக்கம், யாரெல்லாம் அப்படின்னு தெரிஞ்சா கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கலாமேன்னுதான், இது தெரியாமல் வீணாச் சிக்கலில் மாட்டிக்கக்கூடாது பாருங்க.
(அடுத்த பகுதி விரைவில்)
| | |
Comments:
முத்துத்தம்பி,

இப்பத்தான் 'தேன்கூட்டில்'பார்த்தேன்.
வாழ்த்து(க்)கள்.
 

வாழ்த்துக்கள் முத்து.

அன்புடன்
சாம்
 

ஆகா, காலேஜ் வாழ்க்கையை நினைவு படுத்திவிட்டீர்களே!
ஒரு முறை நான், நண்பர்களும் எங்கள் வகுப்புக் 'கண்மணிகளுக்காக' மற்ற பிரிவு மாணவர்களுடன் சண்டைக்குக் கூடப் போயிருக்கிறோம்.
 

நன்றிகள் சாம்.
 

துளசியக்கா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
 

மகேஸ்,
சண்டைக்கெல்லாம் போயிருக்கிறீகளா?. கடைசியில் ஜெயித்தது யார்?.
நான் படித்தபோது எங்கள் கண்மணிகள் சண்டை இழுக்காமல் வந்தால் போதுமென நினைத்துக்கொண்டிருந்தோம் :-).
 

சண்டைக்குப் போனோம். அவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதால் விட்டு விட்டோம். அதே 'கண்மணி' என்னை என் நண்பணிடம் இருந்து பிரித்து இன்னும் முன்பு போல் பேச முடியாத படிச் செய்துவிட்டார். பெண்களின் சூழ்சியை நினைத்துப் பயந்தது அப்போது தான்.
 

மகேஸ்,
பொதுவாகக் 'கண்மணிகள்' ஆண்களுக்குள் பிரிவு ஏற்படுத்த நினைப்பதில்லை, அவ்வாறு உங்கள் நண்பருக்குள் ஏற்படுத்த நினைத்திருந்தால் அவர் உங்களுக்கு "ரொம்ப ரொம்ப" வேண்டியவராயிருந்து பொஸசிவ் காரணமாகச் செய்திருக்கலாமோ ?? :-D.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com