<$BlogRSDUrl$>

Tuesday, May 23, 2006

நான் ஒரு அரக்கன், தேவனும்கூட

வாழ்க்கையில் பலருக்கும் பல முக்கியம். சிலருக்கு சில முக்கியம். இன்னும் சிலருக்கு சில மட்டுமே வாழ்க்கை. இந்த சில, பல விஷயங்கள் வாழ்வில் சாதனைகளைத் தொடங்கிவைக்கின்றன. தவிரவும், எண்ணற்ற தொல்லைகளையும், துயரங்களையும்கூட அளிக்கவே செய்கின்றன.

இவைகளில் மிகவும் முக்கியமானது 'நான்' என்ற எண்ணம். இது பெரும்பாலும் ஒரு மனிதனின் பலம், சில வேளைகளில் பலவீனமும் கூட. ஒரு வண்டி ஓடத்தேவையான எரிபொருளாக பெரும்பான்மையான நேரங்களில் 'நான்' இருந்தாலும் வாழ்க்கையென்ற வண்டியில் பிரச்சனை வருவதும் இதனால்தான்.

ஈகோ பார்க்காமல் வாழ்க்கையில்லை. ஆனால், எல்லாரிடமும் ஈகோ பார்த்தால் வாழ்க்கையே இல்லை.

வாழ்வைச் சந்தோஷமாக அனுபவிப்பவர்கள், சிலரிடம் 'நான்' என்ற அகங்காரத்தைக் காட்டுவதில்லை. குறைந்த பட்சம் மூவரிடம் அதைக் காட்டாதோருக்கு வாழ்வில் ரசிக்க, அள்ள அள்ளக் குறையாது எத்தனையோ காத்திருக்கிறது. அந்த மூவர் பெற்றோர், துணை, குழந்தைகள்.

உங்கள் பெற்றோரிடமும், உங்கள் துணையிடமும், உங்கள் குழந்தைகளிடமும்கூட உங்கள் அகங்காரத்துக்குத் தீனி தேட ஆரம்பித்தால் வாழ்க்கையில் பெரிதாகச் சறுக்குகிறீர்கள் என்றே பொருள். இதை அறிந்தோ, அறியாமலோ பல பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள், சில ஆண்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். குடும்பவாழ்வு சின்னாபின்னமாய்ச் சிதைந்துபோன பலர் இதை அறியாதவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் மகிழ்ச்சியின் பேரழிவுக்கும் இதுவே ஆணிவேறாக இருக்கிறது.

இந்த மூவரிடமும் நெருங்கும்போது உங்கள் தன்மானத்தைக் கொஞ்சம் கழற்றித் தூரவைத்துவிடுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் இந்த அதீதத் தன்மானமே புயலை வீசச்செய்கிறது. அது புயலாக இருந்தால்கூடப் பரவாயில்லை, கொஞ்சம் சேதத்தோடு அமைதியாகிவிடும். பல நேரங்களில் அழியாத நெருப்பையே பற்ற வைக்கிறது. அது நீங்கள் வாழும்வரை, உடலில் கடைசிச் செல் சாம்பலாகும்வரை அணைவதேயில்லை. தன்னைப் பாதி கருக்கிய நிலையில்கூட பலரால் அதன் தன்மையை உணரமுடியாது போய்விடுகிறது என்பது எவ்வளவு பெரிய சோகம்?. அது உங்கள் வாழ்வை மட்டுமல்ல, உங்களைச் சார்ந்தோரின் வாழ்வையும் சேர்த்தே கருகச் செய்கிறது.

உங்கள் துணையிடம் பெண்ணியச் சிந்தனைகளையும், பிடித்தமான ஆணாதிக்கக் கருத்தியல்வாதங்களையும் அருகில்கூடக் கொண்டு செல்லாதீர்கள். அங்கே அது ஒரு எளிதில் பற்றும் தன்மைகொண்ட கொடிய தொற்றுநோய்.

தன்னிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் மகனிடமும் ஆணாதிக்கத்தைத் தேடும் பெண்கள் இல்லையென்று நினையாதீர்கள். தனது மகனிடமும், மகளிடமும், துணையிடமும் தன்மானம் பார்க்கும் ஆண்களும் உண்டு என்று தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இவர்கள் வாழ்வின் இன்பங்கள் பலவற்றைத் தொலைத்துவிட்டவர்கள், இவர்களைத் திருத்துவது எளிதா இல்லையா என்பது பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மறந்தும் அவர்களில் ஒருவராய் நீங்கள் இருந்துவிடாதீர்கள்.
| | |
Comments:
'+' :)
 

முத்து எப்படி இருக்கீங்க.

நல்ல அருமையான கட்டுரை. நல்லா சொல்லியிருக்கீங்க, வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாச்சா?

நீங்க சொன்ன பல விசயங்கள் என்னிடமும் உள்ளன, கொஞ்சம் கொஞ்சமாக தான் திருந்தி வருகிறேன். என்ன இருந்தாலும் ஈகோ ரொம்பவே படுத்துதுங்க :)
 

மறுமொழிக்கு நன்றி ராசா.
 

பரஞ்சோதி,
வாங்க நல்லாயிருக்கீங்களா?.

பொண்ணு நாமளே பாத்துக்கவேண்டியதுதான், வீட்டுல எதுக்குச் சிரமம் கொடுக்கணும் :-)).
 

//பொண்ணு நாமளே பாத்துக்கவேண்டியதுதான், வீட்டுல எதுக்குச் சிரமம் கொடுக்கணும் :-)).//

அங்க என்ன நடக்குன்னு தெரியலையே! ஆமா ஆமா வீட்டுக்கு சிரமமே கொடுக்க கூடாது. நல்லது நடந்தா சரிதான் முத்து!
 

முத்து

ஆணாதிக்க அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய குடும்பத்தில் மனைவி பெண்ணிய கண்ணோட்டம் கொண்டிருப்பதை தவிர்க்க இயலாது.

கணவனை நிறுத்த சொல்லு.நானும் நிறுத்துகிறேன் என்பது தான் நிதர்சனமாக இருக்க முடியும்.
 

நீங்கள் சொல்வது சரிதான் செல்வன். மறுமொழிக்கு நன்றி.
 

nalla katturai :)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com