<$BlogRSDUrl$>

Wednesday, May 10, 2006

செம்பைத் தங்கமாக்க முடியுமா?

ரசவாதம் ஒரு கவர்ச்சியான விஷயம். பிற உலோகங்களைத் தங்கமாக்குதல் மனிதனுக்கு ஒரு கனவு. நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அந்தக் காலத்தில் ரசவாத முயற்சிகள் மிகப் பிரபலம். ஜெர்மனியில் சொல்வார்கள், ரசவாத முயற்சிகளில் பிறந்ததுதான் வேதியியல் என்ற துறை என்று. சித்த வைத்தியம் படித்தவர்களுக்குத் தெரியும், இரசவாத வேதை என்பது சித்திய வைத்தியத்தில் மிக இயல்பான ஒன்று. இதுவரை அதனைச்செய்து வெற்றி பெற்றவர்கள யாராவது உண்டா என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் பலர் இது சாத்தியம் என்றே நினைக்கிறார்கள்.

வெறுமனே சில மூலிகைகளையும், சில வேதிப்பொருட்களையும் சேர்த்து ஒரு உலோகத்தை உருக்கி எடுத்து அதை தங்கமாக மாற்றுதல் என்பது வேதியியல்படி கனவில்கூட நடவாத காரியம். ஒரு உலோகம் இன்னொன்றாக மாறும்போது எஞ்சியுள்ள மிகக்கொஞ்ச நிறை சக்தியாக மாறும் என்று அறிவியலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால், செம்பு தங்கமாகும்போது பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் நிகழ்வு ஏற்பட வேண்டும்.

என் தந்தைக்கு சித்த வைத்தியத்தில் ஈடுபாடும், பரிச்சமும் உண்டென்பதால் இந்த ரசவாதம் பற்றி அவ்வப்போது பேசுவதுண்டு. நான் ஒரு முறை சொன்னேன். "..நீங்களை செம்பையோ அல்லது இரும்பையோ சித்த முறைகளின்படி தங்கமாக்க வேண்டியதில்லை, கொஞ்சம் தங்கத்தை இரும்பாகவோ, செம்பாகவோ மாற்றிக் காட்டினால்கூட உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம்". இது உண்மைதான். ஆனால், இது சாத்தியமா?. இன்றைய அறிவியல் இது நடவாத ஒன்று என்றே மிகத்திடமாக நம்புகிறது.

நண்பர்களே, உங்கள் தனிப்பட்ட கருத்து மற்றும் இது சம்பந்தமான நம்பிக்கைகள், கேள்விப்பட்டவைகள் ஆகியவை ஏதாவது இருந்தால் அறிய ஆசைப்படுகிறேன்.
| | |
Comments:
Once I also heard about this. But the person said that we can't convert the metal into Gold, but the converted metal will look like gold. Even goldsmith can't idetify the difference if the converted metal and gold are mixed in a propotion of 1:4. But he said it can be detected by spectroscopy.
 

அப்படி ஒரு நிலை எற்பட்டால் தங்கதின் விலை தகரமாகிவிடும்!!


நல்ல பதிவு!! நன்றி
 

நல்ல பதிவு முத்து.

எங்கே மன்றம் பக்கம் காணோம்? அங்கேயும் போடுங்களேன்.
 

ஜெய்,
அவ்வாறு யார் மாற்றினாலும் அதுவும் இன்றைக்கு அறியப்பட்ட ஏதோ ஒரு உலோகமாகத்தானே இருக்க வேண்டும்?. ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றும் அறிவியலுக்கு உட்பட்ட வழிமுறையைக் கண்டறிதல் என்பது உலகில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும்.
 

மூர்த்தி,
அவ்வப்போது எல்லா தமிழ்மன்றங்களுக்கும் வந்துகொண்டுதான் இருக்கிறேன், பதிக்கத்தான் சோம்பல்.
 

சிவபாலன்,
உண்மைதான். தங்கம் நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே போகிறது. யாரவது இப்படி வழி கண்டுபிடித்தான் தேவலை :-).
மற்றபடி, இதுபோல் ரசவாதம் மூலம் ராமலிங்க வள்ளலார் கூட செம்பைத் தங்கமாக மாற்றிக் காட்டியிருக்கிறாராம். இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், மண் ஓட்டினையும், தங்கத்தையும் சமமாகப் பாவிக்கும் மனப்பக்குவம் வாய்ப்பவருக்கே 'சித்த ரசவாதம்' வசப்படுமாம். அப்படி மனநிலைவந்த பிறகு தங்கத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம், மாற்றி என்ன செய்யப்போகிறோம் ?. :-).
 

I mean it's not something like converting one metal into Gold. He said he can change the color of metal look like gold and mix with Gold.
 

முத்து,

நமது சித்தர்கள் தந்த பல்வேறு விடயங்கள் இன்னும் நிரூபனம் ஆக்கவில்லை. மேலை நாடுகள் மெல்ல மெல்ல இப்போதுதான் திரும்புகிறது.

இதே பதிவில் இன்னும் சற்று விரிவாக சித்தர்கள் செப்பிய முறைகளையும் தேதி வாராக தொடுத்தால் தமிழர் பரம்பரையும் பாரம்பரியமும் சொல்ல மேலும் ஒரு வலைப்பூ கிட்டும்.

முடிந்தால் வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் உரையும் வளர்க்கலாம்.

உங்கள் எண்ணம் தமிழறிவும் தமிழர் அறிவும் எனில் மிக்க மகிழ்ச்சி

தயை கூர்ந்து இந்த பதிவை மீன்டும் விரிக்கவும்

அன்பன்,
கருப்பன்
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com