<$BlogRSDUrl$>

Friday, March 24, 2006

வீரப்பன் மனைவி போட்டி

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, பாமக சார்பில் பெண்ணாகரம் தொகுதியில் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதை தட்ட மாட்டேன் என்று முத்துலட்சுமியும் கூறியுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி வீரப்பன் மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். வீரப்பன் வேட்டையின்போது அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி வந்தார். வீரப்பன் உயிருடன் இருந்தபோதே அவனை பாமகவில் சேர்க்க அக்கட்சி தீவிரமாக முயன்றது. வீரப்பனும் வன்னியர் என்பதால், ஜாதி அடிப்படையில் வீரப்பனை கட்சியில் சேர்க்க பாமக தலைமை முயன்றது.

இதற்காக சரணடைய வருமாறும் வீரப்பனுக்கு தூது விடப்பட்டது. ஆனால் முதலில் இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் பின்னர் மனம் மாறி விட்டான். இந் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை பாமகவில் சேர்க்க முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த பாமக மாநாட்டில் முத்துலட்சுமியும் கலந்து கொண்டார். அவரை பெண்ணாகரம் அல்லது மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் பாமக சார்பில் நிறுத்தவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.இந் நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணியை சமீபத்தில் முத்துலட்சுமி சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், நான் கொளத்தூரில் ஜி.கே.மணியை சந்தித்தது உண்மைதான். ஆனால் தேர்தலில் நிற்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுமாறுதான் மணியிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் செய்வதாக கூறினார். ஆனால் இப்போது தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் அதுகுறித்து அவர் நினைக்க நேரமிருக்காது என நினைக்கிறேன். நான் தேர்தலில் நிற்க பாமகவிடம் சீட் கேட்கவில்லை. அவர்களும் என்னை அணுகவில்லை. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. யோசித்து வருகிறேன். ஆனால் என்னை சந்திக்கும் பொதுமக்கள் தேர்தலில் நிற்க வற்புறுத்துகிறார்கள். பாமக சார்பில் பெண்ணாகரம் அல்லது மேட்டூரில் நிற்கும் வாய்ப்பு வந்தால் அதுகுறித்து அறிவிப்பேன் என்றார் முத்துலட்சுமி.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதல்கள், விசாரணை என்ற பெயரில் நடந்த கொடுமைகளால் பாதிப்படைந்த மக்கள் முத்துலட்சுமியை தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது ஓட்டுக்களை அப்படியே அள்ளி எடுக்கும் முயற்சியாக முத்துலட்சுமியை பாமகவிற்குள் இழுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
| | |
Comments:
முத்துலட்சுமி போலிஸ் துறை மந்திரியாக வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?என்னவோங்க...வர வர அரசியல்ல ஒண்ணுமே புரிய மாட்டேங்குது..(அது தான் அரசியல்ங்கறீங்களாக்கும்...என்னவோ போங்க)
 

செல்வன்,
ஒரு பொன்மொழி. இது என் சொந்தக் கருத்தல்ல, இது எந்தளவுக்கு உண்மை என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். மாணவர்கள் அரசியலில் சேரலாமா என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் இது, "...அரசியல் என்பது ஒரு சாக்கடை, அதில் எது வேண்டுமானாலும் சேரலாம்..". மேலும் இப்போதுள்ள பல அரசியல்வாதிகளைவிட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எந்த வகையில் குறைந்துபோய் விட்டார் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலவில்லை. :).
 

why not?
 

if Meneka can run in the name of Sajay and Sonya can run on behalf for Rajiv Dynasty, why not Muttuluxmy?
 

கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது அவரின் சட்டப்பூர்வ உரிமை.
 

முதலில் சாதி வேண்டும் என்று சொல்பவர்களே பார்ப்பனர்கள்தான்! எங்காவது ஒரு பாப்பானின் வீட்டிற்குள் தலித்தை நுழையச் சொல்லிப் பாருங்களேன். எங்காவது ஒரு கோவிலுக்குள் ஒரு தலித்தினை நுழையச் சொல்லிப் பாருங்களேன். எத்தனை அய்யர் வீட்டில் தலித்துகளால் நுழைய முடிகிறது? காரணம் என்ன? பார்ப்பனர்கள் இன்றைக்கும் சாதியை கெட்டியாக பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்ற சாதியினரின் வீடுகளில் தலித் தாராளமாக சென்று வருகின்றனர். நான் என் கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன்.
 

///முதலில் சாதி வேண்டும் என்று சொல்பவர்களே பார்ப்பனர்கள்தான்! எங்காவது ஒரு பாப்பானின் வீட்டிற்குள் தலித்தை நுழையச் சொல்லிப் பாருங்களேன். எங்காவது ஒரு கோவிலுக்குள் ஒரு தலித்தினை நுழையச் சொல்லிப் பாருங்களேன். எத்தனை அய்யர் வீட்டில் தலித்துகளால் நுழைய முடிகிறது? காரணம் என்ன? பார்ப்பனர்கள் இன்றைக்கும் சாதியை கெட்டியாக பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்ற சாதியினரின் வீடுகளில் தலித் தாராளமாக சென்று வருகின்றனர். நான் என் கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன்.///

வெங்காயம்,
என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. தயவு செய்து பதிவைப் படித்துவிட்டுப் பின்னூட்டமிடுங்கள். ஒருவார்த்தையாவது சம்பந்தம் இருக்கிறதா?. முன்பு என்னுடைய இன்னொரு பதிவிலும் இதையேதான் செய்தீர்கள். உங்களுக்கு விளையாட இதுதான் பிளே கிரவுண்டா??. :). இங்கு மட்டும்தான் இப்படிச் செய்கிறீர்களா, அல்லது அனைத்து வலைப்பதிவிலும் இதேபோல் எதையாவது வெட்டி ஒட்டுகிறீர்களா??.
 

///டோண்டுவின் வலைப்பதிவில் பின்னூட்டிய உங்கள் வலைப்பதிவுப் பக்கம் இனி நான் வரவே மாட்டேன். பின்னூட்டவே மாட்டேன். சாதியைச் சொல்லிப் புலம்பும் அது வலையில் நீங்கள் பின்னூட்டி உங்கள் பாப்பார ஆதரவை தெரிவித்து இருக்கிறீர்கள். நீங்கள் என்ன பாப்பானா? -சிவனடியார்///

நண்பர் சிவனடியாரே,
உங்கள் பின்னூட்டத்தில் சில வார்த்தைகளை எடுத்துவிட்டு மேலே கொடுத்திருக்கிறேன். பதிவுக்குச் சம்பந்தமாய் ஏதாவது சொல்லக்கூடாதா?. வெங்காயமும் நீங்கள்தானா?. உங்களுக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் ஏதாவதென்றால் அங்கு நீங்கள் செல்வதும், செல்லாததும் உங்கள் விருப்பம். அடுத்தவரை உங்கள் விருப்பப்படி நடக்கக் கட்டாயப்படுத்துவது வன்முறையல்லவா??. நன்றாக யோசித்துப்பாருங்கள். நீங்கள் இதைச் சொன்னது உண்மையிலேயே பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கையாலா அல்லது தனிப்பட்ட விரோதத்தாலா அல்லது எந்தக் காரணத்தால் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும் அடுத்தவரைக் கட்டாயப்படுத்துவது அப்பட்டமான வன்முறை. மேலும் நீங்கள் யார், எப்படிப்பட்டவர், எந்தளவுக்கு பண்புடன் பேசுபவர், எந்த அளவுக்கு உண்மையானவர் என்று எதுவுமே தெரியாமல் இருட்டிலிருந்து வரும் ஒரு குரலை நான் எவ்வாறு நம்புவது?. இதே போல் ஒரு மிரட்டல் கடிதம் போலிடோண்டுவிடம் இருந்தும், மற்றொரு நண்பர் பெயரிலும் வந்தது. அதையெல்லாம் எழுதியதும் நீங்கள்தானா?. எதற்கும் இந்த பதிவை ஒருமுறை படித்துப் பாருங்கள். மேலும் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை மிகக் கடுமையாய் எதிர்த்த பெரியார், பார்ப்பனரான ராஜாஜியுடன் எந்த அளவுக்கு நெருக்கமான நட்புக்கொண்டிருந்தார்?. கருத்து வேறுபாட்டையும், தனிப்பட்ட உறவையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள்.பின்குறிப்பு: நீங்கள் பயன்படுத்திய பிராக்ஸி சர்வர் அந்த அளவுக்கு நம்பகமானது இல்லை என நான் புதிதாய் இணைத்துள்ள, எனது நண்பர் கொடுத்த எனது ஸ்பெஷல் ஜாவா ஸ்கிரிப்ட் சொல்கிறது. :).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com