<$BlogRSDUrl$>

Saturday, April 01, 2006

சிரிக்க மட்டும் - வீடியோ

ஜப்பானிய அழகு. இப்படி உலகில் ஏமாந்தவர்கள் எத்தனை பேரோ ?. நீங்களும் ஒருவராய் இருக்க வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கைக்காகத்தான் இது. :-).

| | |
Comments:
லொள்ளூதான்:-)))
 

இந்த வீடியோவைப் பார்க்கும் போது தேசிகன் அவர்கள் பதிவு ஒன்றில் (பார்க்க: http://www.desikan.com/blogcms/?item=55) நான் இட்ட இந்தப் பின்னூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது:

"என் நண்பன் (அவன் பெயரும் தேசிகன், ஸ்ரீனிவாச தேசிகன்) கண்ட சோகமானக் கனவை நான் இங்கே கூறுகிறேன். ஒரு நாள் கலவரமாக என்னிடம் வந்தான். "டேய் ராகவா, நீதாண்டா எனக்கு ஏதாவது சொல்லணும்" என்றான். "அப்படியே நண்பா, என்னப் பிரச்சினை, ஊழ்வினை வந்துத் துரத்துகிறதா" என்று செந்தமிழில் கேட்க அவன் என்னை ஒரு அடிப்பட்டப் பார்வை பார்த்தான். பிறகு ஆரம்பித்தான். "ஒண்ணுமில்லைடா, கடந்தப் பத்து நாட்களாக ஒரு கனவு வந்துப் படுத்துகிறது. என்னைச் சுற்றிப் பத்துப் பெண்கள். ஒவ்வொருத்தியும் என்னை எங்கெங்கோ உரசுகின்றனர். இந்தக் கனவை எப்படி நிறுத்துவது?" நான்: " அடப்பாவி, இம்மாதிரிக் கனவு வராதா என்று அவனவன் கையில் பிடித்துக் கொண்டு அலைகிறான். உனக்கு என்னக் கேடுகாலம்?" என்றேன். "அக்கனவில் நானும் ஒரு பெண்ணாக இருப்பதுதான் பிரச்சினை." என்றான் தோழன்."

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

துளசியக்கா,
எல்லாம் சும்மா ஜாலிக்குத்தான். உண்மையில், கிராப்பு வெட்டியிருந்தால் சீனர்களில் அவர் பெண்ணா அல்லது பையனா என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம் என்று இங்கிருக்கும் நண்பர்கள் பலர் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். அது உண்மைதான் :-)).
 

டோண்டு அவர்களே,
நீங்கள் கொடுத்த சுட்டியில் தேசிகன் அவர்களின் பதிவில் அந்தக் கதையைப் படித்தேன் சுவாரசியமாக இருந்தது. இனிமேல் கங்கைத்தண்ணீர் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. உங்கள் பின்னூட்டத்தை அங்கும் பார்த்தேன். அந்தக் கனவும் சுவாரசியமாகவே இருக்கிறது(அடுத்தவருக்கு என்றால் சுவாரசியமாத்தான் இருக்கும்) :-).
 

:-))
 

சில பெண்களைக் கூட பின்பக்கம் பார்க்க அழகாயிருப்பர் முன்பக்கம் பார்க்கும் போது அவ்வாறு இருக்காது
 

நன்றி குறும்பன்.
 

என்னார்,
மறுமொழிக்கு நன்றி. உங்கள் மறுமொழியைப் பார்த்து யாராவது சண்டைக்கு வரப்போகிறார்கள்.:-)).
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com