<$BlogRSDUrl$>

Sunday, March 26, 2006

"ரஜினி கட்சி" உதயம்

"ரஜினி மக்கள் கட்சி" என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது. இது அதிமுக விற்கு ஆதரவளிக்கப்போவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலில் வாய்ஸ் கொடுத்துவந்த ரஜினி இந்தத் தேர்தலில் ஒதுங்கி இருந்ததால் சோர்வடைந்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது புத்துணர்வு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

காரைக்குடியில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான ரஜினிகாந்த் ரசிகர்மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ரசிகர் மன்றத்தினர் காரைக்குடி வந்துள்ளனர். கூட்டத்தில், `ரஜினி மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியினை தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

மேலே நீல வண்ணமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே சிவப்பு நிறமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இக்கொடியின் நடுவில் இந்தியாவின் வரைபடமும், அதில் ஐந்து நதிகள் தமிழகத்தை நோக்கி பாய்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதி பசுமை நிறைந்ததாகவும், அதனை ஒரு கை சுட்டிக் காட்டுவது போலவும் காட்டப்பட்டுள்ளது. நீல நிறம் பரந்த மனதையும், வெள்ளை நிறம் தூய்மையையும், சிவப்பு நிறம் தியாகத்தையும் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இக்கட்சியின் முதல் தீர்மானமாக வரும் சட்ட மன்றத் தேர்தலில் ர.ம.க அதிமுகவை ஆதரிப்பதாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எது எப்படியோ இந்தச் சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னொரு கட்சி, தேர்தல் நிலவரம் நன்றாகச் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணிகளின் நடவடிக்கை, ரஜினியின் நடவடிக்கை எப்படி இருக்குமெனப் பார்ப்போம்.
| | |
Comments:
முத்துத்தம்பி,

உங்க மெயில் ஐடி அனுப்புங்க. ஒரு தனிமடல் போடணும்
 

இது என்ன இணையத்தில, ஓசியா ஒரு பிளாக்ஸ்பாட்ல இணையப் பக்கம் ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு.. வருங்காலத்தில மக்களுக்கு ஏகப்பட்ட சாய்ஸ்...
 

போஸ்கோ,
அதனால என்ன?. "முத்து முன்னேற்றக் கழகம்" கட்சி ஆரம்பிக்கனும் அப்படின்னு என்னோட ரசிகர்கள் தொல்லை பண்ணுறாங்க. "ஜான் போஸ்கோ முன்னேற்றக் கழகம்" வெளியிருந்து முமுக கட்சிக்கு ஆதரவளிக்கும் அப்படின்னும் பேச்சு அடிபடுது. :-)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com