Wednesday, March 22, 2006
பிரஷர் குக்கர் பாம்-பயப்படாதீங்க
இங்கே வரும்போது மறக்காமல் கொண்டு வந்த ஒரு பொருள் நம்ம ஊரு "பிரஸ்டீஜ்" பிரஷர் குக்கர். தமிழ் மக்கள் யாருக்கும் ஒரு வாரம் சோறு கொடுக்காம வெறும் ரொட்டி, பீஸா, பிரட்.... இப்படியே கொடுத்தால் அவரின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இங்கே வரும்போது இதைக் கருத்தில்கொண்டே கைவசம் பிரஷர் குக்கருடன் இறங்கினேன். கிட்டத்தட்ட தினமும் பயன்படுத்தும் பொருட்களில் இதுக்குத்தான் முதலிடம், மூளையெல்லாம் கூட அடுத்துத்தான் :-).
பிரஷர் குக்கர் வச்சு சமைக்குறதுல நமக்கு நிறைய வசதி இருந்தாலும் இந்த ஊர் மக்கள் ஏன் இப்படிப் பயப்படுறாங்கன்னு தெரியலை. கிட்டத்தட்ட எல்லோருமே பயப்படுறாங்க. நான் சமைக்க குக்கரைத் தொட்டாலே "டைம் பாம்" லெவலுக்குப் பயப்படுறாங்க ஏனென்றே புரியலை.
அன்று நான் குக்கரை அடுப்பில் வைத்திருப்பதைக் கவனிக்காமல் அந்த சீனத்தோழி பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்ப்போதுதானா திடீரென எனது பிரஷ்டீஜ் குக்கர் விசில் அடித்துத் தொலைக்க வேண்டும்?. அடுத்தவிநாடி என் பக்கத்தில் யாருமே இல்லை. குறைந்தது 20 அடிதூரத்துக்கு ஒரு ஆளையும் காணோம்.
Comments:
ஒருவேளை.'வாரணாசி குக்கர் பாம்' பற்றித் தெரிஞ்சவ்ங்களோ?
நமக்குத்தான் குக்கர் இல்லேன்னா கை ஒடிஞ்சுருமுல்லே?:-)

துளசியக்கா,
சீனாவுல ரொம்ப நாளைக்கு முன்னாடி இதே மாதிரி சில குக்கர் சில வெடிச்சு விபத்து நடந்துருக்காம், அதுதான் அவங்க இப்படி பயப்படுறாங்களாம். நீங்களும் அங்க குக்கர் வச்சுருக்கீங்களா?, அங்க யாரும் பயப்படுறதில்லையா?.

///என் சமையலை நினைச்சு மாமா பயந்தாத்தான் உண்டு:-)///
ஹாஹா... குக்கர் சத்தம் கேட்டு அங்க யாரும் பயப்படுறதில்லை போல. நியூசிலாந்து மக்கள் கொஞ்சம் தைரியமானவங்கதான் போலத் தெரியுது :-).

அன்புள்ள முத்து
எனக்கு தெரிஞ்சு இந்தியாவில ஒரு விபத்து நடந்திருக்கு. நல்ல வேளை ஒன்னும் ஆகலை.
நீங்க ஜாக்கிரதையா இருப்பது நல்லது.
இந்த ஊருக்கு மாணவனா வந்தப்ப இன்னொரு முறையில சோறு வடிக்கக் கத்துக்கிட்டேன்.
முதல்ல அவனை ஆன் பண்ணி 450டிகிரி சூட்டில வச்சிடுங்க.ஒரு கப் அரிசிக்கு, இரண்டு
கப் தண்ணின்னு கணக்கு வச்சு, அரிசிய களஞ்சிட்டு, அடுப்பில கொதிக்க விடுங்க. ந்ல்லா கொதிச்ச
உடனே, அடுப்பயும், அவனையும் ஆஃப் பண்ணி பாத்திரத்தையும் மூடி அவனுக்குள்ள வச்சிடுங்க.
அரிசி அது பாட்டுக்குப் பூவா வெந்திடும். தண்ணி அளவு மட்டும் அரிசிக்கரிசி மாறுபடும். இதுக்கெல்லாம் பத்து நிமிடம் தான் ஆகும். குக்கர் மாதிரி பெரிய பாத்திரம் எல்லாம் கழுவ வேண்டாம். இந்த ஊருக்குப் படிக்க வ்ந்த மகேஷ்ன்கிற சக மாணவன் கத்துக் கொடுத்தான்.
அன்புடன்
சாம்

சாம்,
புதுமுறையா இருக்கே. முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். கொதிக்க விடும்போது அரியையும் சேர்த்துப்போட்டிருக்க வேண்டுமா?

அரிசிய களஞ்ச பிறகு அரிசியையும் தண்ணியையும் சேர்த்து கொதிக்க விடுங்க. சில வகை
அரிசிக்கு, மூணு கப் தண்ணியாவது விட வேண்டியிருக்கும். முதல்ல 2 1/2 கப் தண்ணி சேர்த்துப்
பாருங்களேன்

முத்துத்தம்பி,
சொல்ல மறந்துட்டேன் பாருங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு 'மொழி' இருக்கு பாருங்க. அதுலே எங்க
வீட்டுலே 'சோறு'ன்றதை சாதம்னு சொல்லாம 'பாம்'னு சொல்ற வழக்கம் இருக்கு. எப்போ யாரு இதை
ஆரம்பிச்சு வச்சாங்கன்னு தெரியாது. 'இன்னும் பாம் சாப்பிடலை.இனிமேத்தான் பாம் பண்ணனும்' இப்படியெல்லாம்
சொல்லுவோம். எனக்குத்தெரிஞ்சே ஒரு அம்பது வருசத்துக்குமேலே ஆச்சு. அப்பெல்லாம் 'பாம்'க்கு வேற
'அர்த்தம்' இல்லைதானே?
புளிசாதம் கூட நம்ம வீட்டுலே டைகர்பாம்:-)))

//புளிசாதம் கூட நம்ம வீட்டுலே டைகர்பாம்:-)))//
டீச்சர்
உங்களுக்கு சென்ஸ் ஆஃப் ஹுமர் ரொம்பவே அதிகம்:)))))))))))))))
அன்புடன்
சாம்
டீச்சர்
உங்களுக்கு சென்ஸ் ஆஃப் ஹுமர் ரொம்பவே அதிகம்:)))))))))))))))
அன்புடன்
சாம்
துளசியக்கா,
நிஜமாவா?. புளிசாதம் - டைகர்பாம், பேரு ரொம்ப நல்லா இருக்கே. அப்ப அந்தச் சீனப்பொண்ணு சொல்றது சரிதான். என்ன சொல்லிச்சுன்னு கேக்குறீங்களா?. நான் ஒவ்வொரு முறை சாதம் வைக்கும்போதும் "முட்ஹூ..( இது சீன மொழியில முத்து-mu-t-hu போல) பாம் வச்சிருக்கான், எப்பச் சத்தம் கேக்குமோ தெரியலை.." அப்படின்னு அந்தப் பொண்னோட பாய்பிரண்ட் கிட்ட சொல்லும். அது சொல்றது சரிதான்னு இப்பத்தான் எனக்குப் புரியுது.

///குக்கரை எல்லாம் பார்த்து பயப்படுவாங்களா?!! ரொம்ப ஓவர்... அவங்க எல்லாம் அரிசியே சாப்பிட மாட்டாங்களா?///
பூன்ஸ்,
அது பெரிய கதை. அந்த விசில் சத்தத்தைக் கேட்டுத்தான் பயமே.

Muthu,
naanum pressure cokker oda than vandhu eranginen. adhula vera prestige vaanga vendaam gasket seekaram poidum angellam gasket llam romba velai nnu ore foreing return people tendhu advise. seri nnu enakku pudikkave pudikkadha hawkins.(edhu oru type aana cooker paarunga moodi moodarthukke training edukkanum + namma saadharana eversilver paathremellam ulla pogaadhu...sariyaana bejaaru!!)eppa pazhagi pochu...hmm...eppa edhukku enga edhellam sonnennnu thriyalaye.....seri edhu ennoda cokker puraanam...(he he!!)thulasi style la azhaga pesara thamizh ezhudhitenne!!!!(pat on my back!!)thamizh typing than porumai poradhilla!!!!!STOP!!

ராதா ஸ்ரீராம்,
நீங்களும் அந்த கேஸ்கட் பிரச்சினை பத்தித்தான் நெனைச்சிங்களா?, என்னோட நண்பர் ஒருவரும் இரண்டு மூன்று கேஸ்கட்டுடன் வந்தார். ஹாக்கின்ஸ்ல மூட கொஞ்சம் ட்ரெயினிங் எடுக்கனும்தான். :-).

ரோஜுலு மாறிந்தி! காலம் மாறிப் போச்சு! இன்னுமா குக்கரை வெச்சு மாறடிக்கிறீங்க!! எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் யாருக்கும் தெரியாதா!
அரிசி + 2 மடங்கு தண்ணீர் விட்டு on செய்து விட்டு விட்டு உங்கள் வேலையை கவனிக்க போய் விடலாம். சத்தமில்லை! பொருமலில்லை! விபத்தும் இல்லை. பூ போல சாதம்.இதை விட்டுட்டு!
கற்கால மனிதர்களே! கொஞ்சம் காலத்திற்கேற்ப மாறுங்களேன்!!!

//கற்கால மனிதர்களே! கொஞ்சம் காலத்திற்கேற்ப மாறுங்களேன்!!!//
ஸ்ரீதர்,
கடைசியில் குக்கர் வைத்திருப்பவர்கள் கற்கால மக்களாகிவிட்டார்களா? :). முக்கியமாய் நான் குக்கர் பயன்படுத்துவது உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வேகவைக்கத்தான். ரைஸ் குக்கரில் அந்த வசதி இல்லை பாருங்கள்.
Post a Comment