<$BlogRSDUrl$>

Wednesday, February 01, 2006

ஆச்சரியம் + அதிர்ச்சி = கியூபா

கியூபா நாட்டு நண்ப, நண்பிகள் சிலரை எனக்குத் தெரியும். உடன் பயில்வோர் அவர்கள். அவர்கள் சொன்னவை மிகவும் ஆச்சரியமூட்டுபவையாகவும், அதிர்ச்சியளிப்பவையாகவும் இருந்தன, அவைகளைக் கேட்டால் உங்களுக்கும் அப்படியிருந்தால் அதில் பெரிய ஆச்சரியமில்லை.

* நாட்டைவிட்டு கியூபாக் குடிமக்கள் வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதான விதயம் அல்ல. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதும் இதில் அடக்கம். கியூபக் குடிமக்கள் தாங்கள் செல்லும் நாட்டின் விசா வாங்குவதைவிட வெளியேற கியூபாவின் அனுமதி கிடைப்பதுதான் மிகக் கடினம். அதுவும் அமெரிக்காவுக்கு என்றால் மூச்... 99.99 சதவீதம் உறுதியாய்ச் சொல்லிவிடலாம் அனுமதி கிடையவே கிடையாது. வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் ஒரு வருடத்துக்கு ஒருமுறை மீண்டும் கியூபாவுக்கு வந்து தங்களின் அனுமதியை மீண்டும் புதிப்பிக்க வேண்டும், தவறினால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

* வெளிநாட்டுக்குப் போய் வருபவர்கள் மின்சாரத்தால் இயங்கும் எப்பொருளையும் உள்ளே கொண்டுவரக்கூடாது. பிரெட் டோஸ்டர் உட்பட. இது மின்சாரத்தைச் சேமிக்கச் சிக்கன நடவடிக்கையாம்.

* கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்கு இருந்தால் அரசாங்க வேலை கிடைப்பது மிக எளிது. பேராசிரியர் வேலை உட்பட. அவர் துறையில் மிகுந்த அறிவுடையவராய் இருக்கவேண்டுமென்பதில்லை.

* கட்சியில் செல்வாக்குடையவரை எதிர்த்தால் அமெரிக்க உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் தள்ளப்படுவார்கள்.

* கடல்வழியாய் சிலபத்து மைல்கள் கடந்துவந்து அருகிலுள்ள அமெரிக்கக் கடற்கரையைத் தொட்ட மறுவினாடியே அவர்கள் விரும்பினால் அமெரிக்கக் குடிமகனாய் அங்கீகரிக்கப்படுவார்கள். ஆனால் இடையில் அமெரிக்கக் கடற்படை பிடித்தால் மீண்டும் கியூபாவுக்கே திரும்பியனுப்பப்படுவார்கள். இடையில் கியூபக்கடற்படை பிடித்தால் சொர்க்கமோ, நரகமோ உடனே கிடைக்கும். அவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். அதிர்ஷ்டவசமாய் கரையைத் தொட்ட அடுத்த வினாடியே அமெரிக்கக் குடிமகனான யோகக்காரர்களும் உண்டு.

* கியூபாவின் அங்காடிகளில் அமெரிக்கக் கரன்ஸிகள் தாராளமாய் அங்கீகரிக்கப்பட்ட, புழங்கும் ஒன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்குத் தனி மதிப்பு உண்டு. அரசாங்கம் அதை எதிர்த்தாலும் அங்காடிகள் அதன் மதிப்பே தனி.
| | |
Comments:
நன்றி முத்து.

நமது நாட்டில் தான் கம்யூனிஸ்ட்கள் மூலைச்சலவை செய்யபட்டு கியூபாவில் பாலாறும் தேனாறும் ஒடுவதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

உலகத்தின் எந்த நாட்டிலும், எந்த முறையில் அமல்படுத்தபட்டாலும் நிச்சயம் தோல்வியை தரும் நமது தோழர்களின் "கம்யூனிஸம்"/"Socialism"

எதாவது ஒரு நாட்டில் உருப்படியாக கம்யூனிஸம் செயல்பட்டு அந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்து இருக்கிறதா?
 

நன்றி சமுத்ரா. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் சோஷலிஷம் என்ற பெயரில் நடந்த அக்கிரம்ங்கள் எத்தனையோ. அதற்குத் தனிப்பதிவாய் பல போட வேண்டும்.
 

போலந்து நாட்டில் கம்யூனிஸம் வித்தியாசமாக நடைமுறையில் இயங்கியதாகப் படித்திருக்கிறேன். இ.பா.வின் 'யேசுவின் தோழர்கள்' படிக்கலாம்.

நேரடி அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள். டாக்டர்களுக்கு சம்பளம் குறைவாகக் கொடுத்துவிட்டு, எண்ணெய்க்காக அவர்களை வெனிசுவேலாவிற்கு ஏற்றுமதி செய்வது என்று பல முரண்களை அடுக்கலாம். இவ்வளவு நாள் கம்யூனிஸம் இருந்துவிட்டு திடீரென்று ஒரு நாள் ஜனநாயகத்துக்கு மாறுவதும் க்யூபாவினருக்கு பெரும் சிரமத்தைத் தரும்.

காலைப் பிடித்து க்யூபா மன்றாடவேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆசை; ருஷியா போல் ஆக்கிக் கொண்டு மக்களை சிரமப்படுத்தக் கூடாது என்று ஆட்சியாளருக்கு ஆசை...

விடாக்கண்டன் & கொடாக்கண்டன்
 

east or west
india is best
 

பாலா,
மறுமொழிக்கு நன்றி. 'யேசுவின் தோழர்கள்' படித்ததில்லை. வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பார்க்கவேண்டும்.
 

நன்றி அனானிமஸ்.
 

பூ,
மறுமொழிக்கு நன்றிகள்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com