<$BlogRSDUrl$>

Wednesday, February 01, 2006

சாட் ரூமில் ஆன்லைன் சோதிடர்

அப்படி எதிர்பார்க்கவில்லைதான். அன்று சாட் ரூமில் பொழுதுபோக்காய்ச் சுற்றிக் கதைத்துக்கொண்டிருந்தேன். தமிழ்நாடு சாட் ரூம் அது. சோதிடம் பார்க்க விரும்புபவர்கள் தனிச்செய்தி அனுப்பவும் என்று பொதுரூமில் ஒரு விளம்பரம் வந்தது. சரி.. என்னதான் நடக்குமென்று பார்ப்போமே என்று அந்த ஐடிக்கு ஒரு PM அனுப்பினேன். யாஹூ வாய்ஸ் சாட் சரியாக அவருக்கு வேலை செய்யாததால் ஸ்கைப்பிக்கு வரச்சொன்னார். என்னுடைய ஸ்கைப்பி ஐடி ஞாபகம் இருந்தாலும், கடவுச்சொல்லை மறந்துவிட்டிருந்தேன். பிறகு அவரே எனக்கு ஒரு ஸ்கைப்பி ஐடி உருவாக்கித் தந்தார். ஸ்கைப்பியில் சோதிடரும் நானும் பேசத் துவங்கினோம். பிறந்த நேரம் துல்லியமாய்த் தெரியுமா?.. என்று கேட்டார் சோதிடர். தோராயமாய்ச் சொன்னேன். ஆனால் என்னுடைய ராசிக்கட்டத்தில் எந்தக் கிரகம் எங்கிருக்கும் என்பது எனக்குத் தெரியுமாகையால் சொன்னேன். அதை வைத்து சரியாய்ச் ஜாதகத்தைக் கணித்தார். எல்லாத்தும் இப்போ மென்பொருள் வந்துவிட்டது. இல்லையென்றால் நான் பிறந்த வருடத்துப் பஞ்சாங்கம் இல்லாமல் அவரால் ஒன்றும் செய்ய இயலாது. இப்போது கிடைக்கும் இலவச மென்பொருட்களே கிட்டத்தட்ட 10,000 வருடத்துப் பஞ்சாங்கத்துடன் வருகின்றன. எனது ஜாதகத்தை வைத்து நிறையப் பலன்கள் சொன்னார். கிட்டத்தட்ட எல்லாமே சரியாக இருந்தன. எனக்கும் கொஞ்சம் ஜாதகத்தில், அடிப்படையில் பரிச்சயம் உண்டு. அவர் ஏதாவது ஒரு பலன் சொன்னால் அதை எப்படிச் சொன்னீர்கள் என்று மறக்காமல் கேட்டேன், அவரும் சளைக்காமல் காரணம் சொன்னார். ஜாதகத்தை வைத்துச் சொல்லும்போது இது ஒரு வசதி. தாம் நினைத்தையெல்லாம் சோதிடர் சொல்ல முடியாது. ஏன் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் கேட்கலாம், உங்களுக்கும் கொஞ்சம் அடிப்படை தெரிந்திருந்தால். ஒரு ஆன்லைன் சோதிடக்கம்பெனி ஆரம்பித்திருப்பதாயும், அது சோதனை ஓட்டத்தில் இருப்பதாயும் சொன்னார். அது வெற்றிகரமாய் இருந்தால் விரையில் கட்டணமாய் மாற்றலாம் என்று எண்ணியிருப்பதாகச் சொன்னார். கடைசியாய்த் திருமணம் பற்றியும் ஒன்று சொல்லியிருக்கிறார், பார்க்கலாம் அது எவ்வளவு தூரம் பலிக்குமென :-).
| | |
Comments:
அட அந்த வலைத்தள முகவரியை நமக்கும் தாங்கப்பா!
 

திருந்தப் போவதில்லை'யப்பா நாம எல்லாம் !
 

அனானிமஸ்,
வலைத்தளமெல்லாம் இல்லை. யாஹூ முகவரிதான். astrology_speak இதுதான் அந்த யாஹூ ஐடி. இவரை ஆன்லைனில் பார்த்தால் பிடியுங்கள்.
 

/// திருந்தப் போவதில்லை'யப்பா நாம எல்லாம் !///

தருமி,
நாம என்று நீங்களும் சேர்ந்துகொண்டீர்களா?. திருந்தப்போவதில்லையப்பா நீங்கள் எல்லாம் என்றல்லவா இருக்கவேண்டும்? :-).

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்....
வேறென்ன நான் சொல்வது?. பகுத்தறிவு என்ற போதையில் முரட்டுத்தனமாய் அடுத்த பக்கத்தில் இருப்பது அத்தனையையும் வேகமாய் மறுப்பதற்கும், மூடத்தனமான பழமையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை.
 

இவ்வளவு சொன்னவர் வலைதள முகவரியை ஏன் கொடுக்க வில்லை கொடுத்தால் நாங்களும் முயன்று பார்ப்போமே?
 

// இவ்வளவு சொன்னவர் வலைதள முகவரியை ஏன் கொடுக்க வில்லை கொடுத்தால் நாங்களும் முயன்று பார்ப்போமே?///

எண்ணார்,
யாஹூ சாட்டில் தான் சந்தித்தேன். ஐடியைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
 

hi satheesh kumar
 

முத்து! திருமணம் பற்றி சொல்லிவிட்டாரா?!

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!! :)
 

இளவஞ்சி,
நன்றி. திருமணம் பற்றி என்ன சொன்னார் என்று விளக்கமாய்த் தனியாய்ச் சொல்கிறேன் . அப்புறம் நீங்கள் பல வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியிருக்கும்.:-)))
 

ஹல்லோ Mr. மணி

அந்த ஜோதிடர் உங்க அண்ணாத்தையாமே !
 

////ஹல்லோ Mr. மணி
அந்த ஜோதிடர் உங்க அண்ணாத்தையாமே !///

அதிலென்ன சந்தேகம்?. அனைவருமே அண்ணன் - தம்பிகள்தானே. :-)).
 

அன்புள்ள முத்து

சோதிடத்தப் பத்தி எளிமையா இந்த அமெரிக்கர் புத்தகம் எழுதியிருக்கிறார். இவருடைய முத புத்தகத்தை, ஜெர்மன் மொழியிலயும் மொழிபெயர்த்திருக்காங்களாம்.
http://www.jamesbraha.com/astrology.html

இலவச மென்பொருள்ல நரசிம்ம ராவ்ங்கிறவர் கொடுக்கிற மென்பொருள் ரொம்ப சிறப்பா
இருக்கு.

நண்பர் செல்வன் என்னை, சங்கிலிப் பதிவில சேர்த்திருக்காருங்க. நான் வரும் போது உங்கள
கூப்பிடப் போறேங்க. நான் கூப்பிடப் போற நாலு பேர்ல நீங்க ஒருத்தர். கூப்பிடும் போது
கண்டிப்பா வந்திடுங்க!!!

அன்புடன்
சாம்
http://kozhundu.blogspot.com/
------------
மறுமொழிக்கு நன்றி சாம். மறுமொழி மட்டுறுத்தலில் ஒரு சின்ன பிரச்சனை அதனால் உங்கள் மறுமொழியை இங்கே அப்படியே எடுத்துப்போட்டிருக்கிறேன். PVR நரசிம்மராவ் சாப்ட்வேர் நீங்களும் வைத்திருக்கிறீர்களா?. அது மிகவும் நன்றாக இருக்கிறது, அத்துடன் பத்தாயிரம் வருடத்தைய கோள்களின் நிலையும் சேர்த்தே இருப்பதால் மிகவும் அருமையாக இருக்கிறது. சோதிடத்தில் நான் இன்னும் இதில் முழுமையான கத்துக்குட்டிகூட இல்லை, பார்க்கும்போது கவரும் எந்தக் கலையையும் என்னதான் அதில் இருக்கிறது பார்ப்போமே அதைச் சுற்றி வருவது எனது வழக்கம், அப்படி அறிமுகமானதுதான் இதுவும். சரி..உங்களுக்குச் சோதிடம் பார்க்கத் தெரியுமா?.
 

முத்து நல்லா இருக்கீங்களா..? உங்களுக்கும் இப்போது அந்த அனுபவமா..? உங்களுக்கு பரவாயில்லை. அவர் ஐ.டி கொடுத்திருக்கார். கொஞ்ச வருசம் முன்னாடி எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம். நீங்க படிச்சீங்களான்னு தெரியல. நேரம் கிடைக்கிறப்ப பாருங்க.
http://murugapoopathi.weblogs.us/archives/37
 

அன்புள்ள முத்து
கிடைக்கும் போதெல்லாம் சோதிடப் புத்தகங்களைப் ப்டித்து வருவதால் அடிப்படைகள் நன்றாகப்
புறிகிறது. ஆனால் யாருக்கும் பலன் சொன்னதில்லை. உங்களுக்கு இதை பற்றிப் படிக்கும் போது
ஏதேனும் கேள்வி இருந்தால் மயில் அனுப்புங்கள். எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். இதைப்
பற்றி முறையாகப் படிக்க ஆசை. என்னிடமும் திரு. நரசிம்மராவின் மென்பொருள் இருக்கிறது.
அன்புடன்
சாம்
 

jyothidathil nambikkai ulla oruvarai parkkumbothu migavum santhoshamaga irukkirathu. En thirumanathilum atharku piragum engal jyothidar chonnathu appadiye nadanthathu. Unfortunately he is no more.En thirumanam mudintha 3 varudangalileye iranthu vittar.Athuvum avar ganithu chonna mathirithan nadanthathu.
 

முருகபூபதி,
வாங்க நல்லா இருக்கீங்களா?. உங்களோட "ஜிலீர்" அனுபவத்தைப் படிச்சதும் என் நண்பரின் அனுபவம் நினைவுக்கு வந்தது. தனிப்பதிவாக இட்டுவிட்டேன்.
http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_17.html
 

சாம்,
கிட்டத்தட்ட உங்களை மாதிரியேதான் நானும். சில புத்தகங்களைப் படித்ததோடு சரி. தமிழோவியத்தில் சோதிடக்கட்டுரை படித்திருக்கிறீர்களா?. மிக எளிமையாக ஆரம்பத்தில் இருந்து எழுதியிருக்கிறார்.
 

கீதா சாம்பசிவம்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி. வாழ்க்கையில் பல நிகழ்வுகளை எளிதாகப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. மணமகளோ, மணமகனோ யாரென்ற தெரியாதபோது என்ன பொருத்தம் வேண்டுமானாலும் பார்த்து விருப்பப்படி நடந்துகொள்ளலாம்,
ஆனால், ஒருவரைத் தேர்ந்தெடுத்தபின் ஜாதகம் என்பதற்காய் எல்லாவற்றையும் விட்டுவிட முடியாதுதானே, பெரும்பாலும் யாரும் அப்படியேதான் செய்திருப்பார்கள். என்ன செய்வது, வாழ்க்கையில் பல விஷயங்கள் நமது கையில் இல்லை என்பது கொஞ்சம் கசப்பாய் இருந்தாலும் அதுதான் நிதர்சனம். சிலசமயம், தற்செயலான நிகழ்வாகக்கூட அது இருந்திருக்ககூடும். நம் கையில் என்ன இருக்கிறது?.
 

Hello, Muthu, Naan chonnathu antha Jyothidar iranthu vittar enru. Neengal thavaraga purinthu kondu vitteerkal enru ipp0luthu than parthen.
My husband is with me only.Our marriage is going to complete its 35th year on May.We are happy and well settled.
 

oh .. ok now i understand.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com