<$BlogRSDUrl$>

Thursday, March 23, 2006

உளவியல் கொஞ்சம்

உளவியல் மீது பலருக்கும் ஆர்வம் இருக்கும். நான் சின்ன வயதில் நினைத்ததுண்டு, சைக்காலஜி படித்தவர்களால் அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியும், அதனால் நாமும் அதைப் படிக்க வேண்டும் என்று அந்த வயதில் நினைத்ததுண்டு. கொஞ்சம் உளவியல் பற்றிப் படித்த பிறகுதான் தெரிந்தது, அது எவ்வளவு பெரிய தவறான புரிதல் என்று. ஆனாலும் படிக்கும் இயற்பியல், வேதியியலைவிட அது வாழ்க்கைக்கு நேரடியாய் அதைக் கற்றவருக்கு உதவும் என்பது மிகவும் உண்மை.

உடலில் வரும் நோய்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. அதுபோல்தான் மனதுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கையும். இந்த இருநோய்களையும் நேரடியாகவே ஒப்பிட முடியும். சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற சில அடிக்கடிவரும் ஆபத்தில்லா மனநோய்களும் உண்டு. நமக்கு அடிக்கடிவரும் டென்சன், கோபம் அதனால் வரும் உடல் தளர்வு ஆகியவை எல்லாம் இந்த வகையைச் சார்ந்ததுதான். உடல் நோயாய் இருந்தாலும், மனநோயாய் இருந்தாலும் அது நம் உடலையும், இயல்பு வாழ்க்கையும் வெகுவாகவே பாதிக்கிறது. ஆனால், உடலில் நோய் இருந்தால் அது ஒருவர் புத்திசாலியாய் இருப்பதை எவ்வாறு நேரடியாய்ப் பாதிப்பதில்லையோ அதேபோல் மனநோயாளிகளும் புத்திசாலிகளாயும், அதிபுத்திசாலிகளாயும், வெற்றிபெற்ற மனிதர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு.

இன்னும் கொஞ்சம் சொல்லும் முன்னர் சுதந்திரம் பற்றிய ஒரு பொன்மொழியைச் சொல்லியாக வேண்டும். "நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்". இதைச் சொன்னவர் பெரிய சிந்தனையாளர். அடுத்தவர் சொல்லும் ஒன்று தன்னால் ஏற்கமுடியாதது என்றாலும் அதைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று ஒத்துக்கொள்வது, அத்துடன் நில்லாமல் அவரின் அந்த உரிமையைக் காக்க உயிரையையும் கொடுக்கத் தயாராக இருப்பது. இது மிக உயர்ந்த வகைச் சிந்தனை, செயல்பாடு.

சாதாரணமாய், அடுத்தவர் சொல்வது நமக்கு ஒப்பில்லையென்றால், அதை அவ்வளவாய்க் கண்டுகொள்வதில்லை, இது சாதாரண வகை. இன்னொரு வகை உண்டு, அது கொஞ்சம் தீவிரமானது. ஒருவர் சொல்வதில் ஒப்பில்லையென்றால் அவருடன் பகைமை பாராட்டுவது, தமக்கு நெருங்கியவர்களிடம் அந்த ஒப்புமை இல்லாத நபரிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது, இன்னும் நெருங்கியவராயிருந்தால் தொடர்பே கூடாதென கட்டாயப்படுத்துவது. இது ஒரு அப்பட்டமான வன்முறை. ஆனால், இதை இந்த வன்முறையை எல்லாரிடமும் செய்ய இயலாது, மிக நெருங்கியவர்களிடம் மட்டுமே இதைச் செய்ய இயலும், கட்டாயப்படுத்த முடியும்.

இப்போது அடுத்த கட்டத்துக்கு வருகிறேன். இது ஒருவகை மனநோய். இதன் துல்லியமான சைக்கலாஜிகல் டெர்மினாலஜிகல் பெயர் நினைவில்லை, ஏதோ சிண்ரோம் அல்லது டிஸார்டர் என்று வரும். உங்களில் பலருக்கு இந்த நோயை நம்பவே இயலாது. மேலே கூறிய வன்முறையைவிடக் கொடுமையானது. ஒருவர் சொல்வதில் அல்லது செய்வதில் தமக்கு ஒப்புமை இல்லாவிட்டாவிட்டால் அவருக்குத் தீங்கு செய்வது. இது மனநோயின் ஆரம்பக்கட்டம். கொஞ்சம் முற்றிய நோயாய் இருந்தால் - சில ஆண்டுகள் பழைய நோயாய் இருந்தால், ஒப்புமையில்லாத நபருடன் தமக்கு நெருங்கியவர் தொடர்பு வைத்திருப்பதற்காக அவரிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார், நிறுத்திக்கொள்வார், சில நேரம் நெருங்கியவருக்கேத் தீங்கும் செய்வார். இதை நம்பமுடியாது என்று நினைக்காதீர்கள். முற்றிய நோயாளியாய் இருந்தால், முன்னால் சொன்னதைப் போல் நெருங்கியவருடன் அது நிற்காது. இது அதையும் தாண்டிக்..... கொடூடூடூ...ரமானது. தமக்கு முகமே தெரியாதவர்களிடமும் இது நீளும். தமக்கு ஒப்புமை இல்லாத ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் நோயாளியால் கொஞ்சமும் தாங்கிக்கொள்ள இயலாது. நெருங்கியவராய் இருந்தால் நேரடியாய்ச் சொல்லிவிடுவார். எனக்குச் ஜான் கொஞ்சமும் பிடிக்காது. அவனுடன் எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளாதே என. யாரெனத் தெரியாதவர்களிடமும் இதை நீட்டிப்பார். முகந்தெரியாதவர்களிடம் முதலில் மறைமுகத்தாக்குதல் செய்வார். ஒருநாள் அவர் தனியாய் வந்தால் இருட்டில் இருந்து கல்லால் அடிப்பார். முடியாவிட்டால் வேறு மறைமுகமான முறையில், தான் யாரென்பதைக் காட்டாமல் தாக்குதலில் ஈடுபடுவார். எதுவெல்லாம் தான் யாரென்பதைக் காட்டாமல் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அது அத்தனையையும் செய்வார். இத்தனைக்கும் அவருக்கும் இவருக்கும் எந்தச் சம்பந்தமும் இராது, முன்பகையும் இராது. எதுவும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மொட்டைக் கடுதாசியாவது போடுவார். ஆனால், அதனால் வரும் பின்விளைவுகள் பற்றிக் கொஞ்சம் கவனமாய் இருப்பார், அச்சப்படுவார். அதனால் தான் யாரெனக் காட்டிக்கொள்ளவே மாட்டார். தாக்கப்படுபவர் கருப்பா சிவப்பா என்றுகூட அந்த மனநோயாளிக்குத் தெரிந்திராது, அதுபற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை, அந்த ஒப்புமையில்லாதவருடன் தொடர்பு வைத்தது கொலைக்குற்றம் போலவே நமது மனநோயாளி கருதுவார். ஆனால் அதன் பின்விளைவு பற்றிய உணர்வு இருக்கும். உங்களால் நம்ப முடிகிறதா?. இதற்கே அசந்துவிடாதீர்கள், குணப்படுத்தமுடியாத அளவுக்கு முற்றிய நிலையும் உண்டு. அதைக் கேட்டால் மயங்கியே விழுந்துவிடுவீர்கள். இக்காரணத்துக்காய் முகந்தெரியாதவரிடம் தான் யாரென்பதைக் காட்டியே நேரடியாகத் தாக்குவார். அதன் பின் விளைவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படமாட்டார். கத்தியையோ அல்லது துப்பாக்கி எடுத்து அறிமுகமில்லாத ஒருவரை நேருக்கு நேராய்த் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது நினைத்துப்பார்க்க முடிகிறதா?. அறிமுகமில்லாத ஒருவரை, நெருங்கிய ஒருவரை உப்புச்சப்பில்லாத காரணத்துக்காய் கொலை செய்த மனநோயாளிகள் எத்தனையோ பேர் உண்டு. காரணம் என்னவென்று பார்த்தால் இதுபோல் குணப்படுத்த முடியாத அளவுக்கு ஒரு டிஸார்டரால் பாதிக்கப்பட்டிருந்திருப்பார். அவர் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு உள்ளாக்கியிருந்தால் அந்த அளவுக்குப் போயிராது.

பொன்மொழி சொல்லும் வகையைச் சார்ந்தவர்கள் அதிகம் உள்ள சமுதாயம் மிக ஆரோக்கியமானது. நாத்திகப் பெரியாரும், தீவிர ஆத்திக ராஜாஜியும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தது இதனால்தான். காந்தியும், ஜின்னாவும் கூட நல்ல நண்பர்களே. இது மிக ஆரோக்கியமான ஒன்று. கடைசியில் உள்ள வகையைச் சேர்ந்தவர்கள் தனியாகப் பிரித்துவைக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் இருப்பதில்லை. சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்களே அந்த வகை. எளிதாய்க் கண்டுணர முடியும். அதற்கும் கொஞ்சம் முன்னால் உள்ள மனநோயாளிகள் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருப்பவர்கள். எளிதாய் உணர முடியாதவர்கள். இவர்களும் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதில்லை, அரிதாகத் தட்டுப்படுபவர்களாய் இருப்பார்கள். ஆனாலும் விபத்துபோல அவர்களிடம் சிக்கிக் காயம்பட்டவர்களும், உயிரைவிட்டவர்களும் உண்டு.

நீங்கள் இதில் எந்த வகை மனிதர்களையெல்லாம் பார்த்திருக்கிறீர்கள்?. உங்கள் நண்பர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?.
| | |
Comments:
Very nice.
 

நன்றிகள் மனசாட்சி.
 

Muthu,

this is A very vast area of study and research.

"Passions of the mind" by Irving Stone padithu paarungal...

A good post.Muthu
 

முதலில் சாதி வேண்டும் என்று சொல்பவர்களே பார்ப்பனர்கள்தான்! எங்காவது ஒரு பாப்பானின் வீட்டிற்குள் தலித்தை நுழையச் சொல்லிப் பாருங்களேன். எங்காவது ஒரு கோவிலுக்குள் ஒரு தலித்தினை நுழையச் சொல்லிப் பாருங்களேன். எத்தனை அய்யர் வீட்டில் தலித்துகளால் நுழைய முடிகிறது? காரணம் என்ன? பார்ப்பனர்கள் இன்றைக்கும் சாதியை கெட்டியாக பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர். மற்ற சாதியினரின் வீடுகளில் தலித் தாராளமாக சென்று வருகின்றனர். நான் என் கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன்.

பட்டம் பெற்ற படித்த பல இணைய அம்பிகளும்கூட இன்னமும் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது வேதனைக் குரியது.

இந்துமதம் மொத்தமுமே காஞ்சியில் இருப்பதாக நினைத்து ஜெயேந்திரனை கடவுள் என்று கும்பிட்ட பார்ப்பனர்கள் இன்று எந்த முகத்தினை வைத்துக் கொண்டு பேசமுடியும் வெளியுலகில்?
 

வெங்காயம்,
வேறு ஏதோ பதிவில் பதியவேண்டிய வேண்டிய மறுமொழியை இங்கு பதித்துவிட்டீர்களா?. எனது உளவியல் பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே.
 

நன்றி ராதா ஸ்ரீராம். உங்களுக்கு அந்த சைக்கலாஜிகல் சிண்ட்ரோம் பெயர் தெரியுமா? நான் நினைவுபடுத்திப் பார்த்தேன், சரியாக வரவில்லை.
 

முத்து,
உளவியல் என்பதே ஒரு ஒப்பு நோக்குதல் தான். இந்தச் சமுதாயம் எதை விரும்புகிறதோ அதைச் செய்து கொண்டிருந்தால் அவன் சாதாரண மனிதன். இல்லையெனில் அவன் ஒரு மனநோயாளி.
 

மகேஷ்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி.

உங்கள் கருத்து இவ்விடத்தில் எந்த அளவுக்குப் பொருந்தும் என்று எனக்குத் தெரியவில்லை. உளவியல் என்பது ஒரு அறிவியல், அது வெறும் ஒப்பீடோ அல்லது கதையோ அல்ல. மேலும் உளவியல் என்பது மனநோயாளிகளைப் பற்றியது மட்டுமல்ல. ஒரு மனிதன் இதுவரை தான் செய்த, தான் செய்யும், தான் செய்யப்போகும் செயல்களைகளையும், அதற்கான காரணங்களையும் விளக்கும் ஒரு அறிவியலை வெறும் ஒப்பீடு என ஒற்றை வார்த்தையில் கூறுவது எந்த அளவுக்குச் சரி என யூகிக்கும் பொறுப்பையும் மற்றவர்களிடமே விட்டுவிடுகிறேன். நீங்கள் கூறுவதுபோல் அது வெறும் ஒப்பீடாக இருக்கும்பட்சத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தும் மருத்துவர்களும், உளவியல் துறையினையும் ஒரு உணமையல்லாத ஒன்றாகவே இருக்க வேண்டும், ஆனால் அது உண்மையா என்பதை இந்த உலகம் நன்றாக அறியும்.

மேலும் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது மனநோய்களில் ஒன்றாக உளவியல் புத்தகங்க்ளும், உளவியல் துறையும் கூறும் ஒன்றைப்பற்றித்தான்.
 

நல்ல ஆரம்பம் தொடருங்கள். வெங்காயம் போன்ற மோசமான முற்றிய மனநோயாளிகளை எப்படி கையாள்வது?
 

உங்கள் பதிவிற்குப் பின்னூட்டம் அளித்துள்ள வெங்காயம் போன்றவர்களை எதில் சேர்ப்பது?யாரோ ஒரு பிராமணரால் அவர் மிக மோசமாக ஏமாற்றப் பட்டிருக்கவேண்டும். அதற்காக எல்லாரையும் திட்டுகிறார். எல்லா சமூகத்திலும் நல்லவர், கெட்டவர் உண்டு. அதற்காக ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தைக் குறி வைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
 

மறுமொழிக்கு நன்றி வரதன் அவர்களே.
 

பதிவிற்கு நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே. எனது கருத்தும் இதேதான். யாரால் பாதிக்கப்பட்டாலும் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்த சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிகள் உண்டு. கொஞ்சமும் நாகரீகமில்லாமல் பண்பாடு இல்லாமல் இவ்வாறு செய்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.
 

mani:dayavu seithu yarum yaraium kurai kooratheerkal mr.vengayam sonnathu thavuruthan irunthalum avarai thittaatheerkal. ethough onru avarai kaya padutthiullathu. jai india.
 

hi
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com