<$BlogRSDUrl$>

Friday, February 03, 2006

ராம் - பாகிஸ்தானிலிருந்து

கொஞ்ச நாட்களாய் அவரை எனக்குத் தெரியும். இங்கேதான் படிக்கிறார். அவ்வப்போது ராம் சொல்வார், '..நான் ஒரு பாகிஸ்தானி, அதன் பின்னர்தான் நான் இந்து..'.

* முசாரப் செய்தவை அத்தனையும் சரியாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுவரை இருந்த ஆட்சியாளர்களுக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை. சிறுபான்மையினரான இந்துக்கள், கிருத்துவர்கள் போன்றவர்களைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திப்பவர் முசாரப்.

* படிக்காத முஸ்லீம் பாகிஸ்தானிகள் பலரும் சிறுபான்மையினரைப் பொருத்தவரை எங்கள் நாட்டில் ஆபத்தானவர்கள், குறிப்பாய்க் கலவர நாட்களில்.

* இந்தியாவில் மதம் சம்பந்தப்பட்ட அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அது பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் மீது கடுமையாக எதிரொலிக்கும். நாங்கள் எந்த வகையிலும் அதனோடு சம்பந்தப்படாதவர்கள் என்பது பல மூடர்களுக்குப் புரிவதே இல்லை. பாபர் மசூதி விவகாரம் கிளம்பியபோது எங்களுக்கு மறக்கமுடியாத பல கொடுமைகளைச் செய்தார்கள்.

* குஜராத் கலவரம் இந்தியாவில் நடந்தபோது நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் கடவுள் புண்ணியத்தில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் முசாரப்பின் நடவடிக்கைகள்தாம்.

* 1950-களில் 20 சதவீதம் பேர் இந்துக்கள். இப்போது 4 சதவீதம் பேர்தான் எங்கள் நாட்டில் இந்துக்கள். அதுவும் சிறுபான்மையினர் எவ்வளவு என்பதைக் கணக்கெடுப்பதில் அரசாங்கம் போதிய நியாய உணர்வுடன் செயல்படுவதில்லை.

* பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிக்காலத்தை முழுவதும் நிறைவு செய்த பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் அனைவருமே தங்களைப் பற்றித்தான் சிந்தித்தார்களே தவிர நாட்டை ஒருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆளாளுக்கு முடிந்தவரை சுருட்டத்தான் செய்தார்கள். நவாஸ் செரீப் உட்பட. புதிதாய் ஒருவரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அவர் கையில் நாட்டைக் கொடுப்பதைவிட முசாரப்பே இருந்து விட்டுப் போகட்டும் என்று மக்கள் பலரும் நினைக்கிறார்கள்.

* ஒரு நாடு பணக்கார நாடோ, ஏழை நாடோ அது உலக அளவில் கொஞ்சம் மதிப்புடன் இருக்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து வருகிறேன் என்று எந்த நாட்டில் போய் சொன்னாலும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கிறார்கள். அப்பாவிக் குடிமக்களாகிய எங்களின் இந்தப் பரிதாபநிலை இதுபோன்ற அனுபவம் இல்லாமல் இருக்கும் இந்தியரான உங்களுக்குப் புரியாது.

* எங்கள் நாட்டின் நிலை ஒன்றும் உற்சாகமளிப்பதாகவே இல்லை. கடவுள்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இந்தியா போல் எங்கள் நாடும் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.
| | |
Comments:
முஃஷ்ராப் பற்றி வித்தியாசமான தகவல்கள். தகவலுக்கு நன்றி
 

பாகிஸ்தானில் படித்தவர்களிடம் முஷார்ப் மீது நல்ல என்னமே இருக்கிறது.

ஆனால் அங்கே அதிகம் மதரஸாக்களில் படிபபவர்கள் தாம்.

லண்டன் குண்டுவெடிப்பு சம்பந்தபட்ட இளைஞர்கள் பாகிஸ்தான் மதரஸாக்களில் தான் training எடுத்து கொண்டார்கள்.

உன்மையிலேயே, பாகிஸ்தான் மக்கள் பழக இனிமையானவர்கள்!

அதுவும் இந்தியர் என்றால் கொஞ்சம் பாசம் ஜாஸ்தி - போர் காலம் தவிற.

இந்த இரண்டு நாடுகளும் போர் செய்து தான் ஆக வேண்டும்.

Geo-Political necessacities.

எனது நன்பர் ஒரு கூறுவார் "சீனா, கடைசி பாகிஸ்தானியர் உயிரோடு இருக்கும் வரை இந்தியாவை எதிர்க்கும்"

China will fight India to the last Pakistani!
 

சுவாரஸ்யமான பதிவு முத்து

எங்களை மாதிரி எழுத்தாளர்களைப் படிக்கிறதை நிறுத்திட்டு எழுத வந்திட்டீங்க போல? :-))))
 

நன்றி கல்வெட்டு.
 

நிலா,
:-)))). இருந்தாலும் உங்க மாதிரி எழுத்தாளர்களைப் படிக்கும் சுவாரசியம் எழுதுவதில் இல்லை என்பதுதான் உண்மை :-).
 

நன்றி சமுத்ரா.
 

nalla pathivu.
 

நன்றி ராம்ஸ்.
 

NALLA PATHIVU...VAAZTTHUKKAL!
 

PAKISTAN=INDIA!
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com