<$BlogRSDUrl$>

Sunday, May 01, 2005

பொருளாதார வல்லரசுகள் - Top 10


கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலை ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. பழங்காலத்திலிருந்தே பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்து வந்த ஆசிய நாடுகள் சில நூற்றாண்டுகளாய்ப் பல காரணங்களால் கொஞ்சம் பின் தங்கி இருந்துவந்தன. வரும் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாகவே இருக்கும் என்பதற்கான வலுவான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன என்பது உலகெங்குமுள்ள பொருளாதார, அரசியல் நோக்கர்களின் கருத்து.

கீழேயுள்ள பட்டியலில் காண்பது நாடுகளின் மொத்த உற்பத்தி gross domestic product (GDP) அமெரிக்க டாலர்களில் ( 2004 நிலவரம், CIA World Fact Book ).

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நான்காம் இடத்தில் இருந்த ஜெர்மனி ( ஒரு காலத்தில் இரண்டாமிடத்தில் இருந்தது) ஐந்தாமிடத்துக்குத் தள்ளப்பட்டு நான்காமிடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

பூமியின் மொத்த உற்பத்தி 55.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பூமி - $ 55,500,000,000,000

1. அமெரிக்கா - $ 11,750,000,000,000
2. சீனா - $ 7,262,000,000,000
3. ஜப்பான் - $ 3,745,000,000,000
4. இந்தியா - $ 3,319,000,000,000
5. ஜெர்மனி - $ 2,362,000,000,000
6. இங்கிலாந்து - $ 1,782,000,000,000
7. பிரான்ஸ் - $ 1,737,000,000,000
8. இத்தாலி - $ 1,609,000,000,000
9. பிரேசில் - $ 1,492,000,000,000
10. ரஷ்யா - $ 1,408,000,000,000
| | |
Comments:
நன்றி முத்து. நிலமை இப்படி இருக்கையில் ஐ.நா நிரந்திர உறுப்பினர் பதவி இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது.
 

கோல்ட் மென் சாச்சின்
(BRIC) ரிப்போர்ட்
பாருங்கள். தெள்ளத்தெளிவாக சொல்லியிருப்பார்கள். 2050-இல் உலகின் மிகமுக்கியமான பொருளாதார அரசுகளாக, பிரெசில், ரஷ்யா, இந்தியா, சீனா இருக்குமென்று ஆருடம் கூறுகிறார்கள்.
 

ஜீவா,
பார்க்கலாம் என்ன நடக்குமென்பதை, 100 கோடி மக்களையும், உலகின் முண்ணனிப் பொருளாதாரங்களில் ஒன்றையும் உலகம் கண்டுகொள்ளாமல் விடுவது அவ்வளவு எளிதல்ல; அது உலகின் நன்மைக்கு உகந்ததுமில்லை.
 

நாராயணன்,
அந்த ஆருடம் உண்மையாக வேண்டும். எனக்கென்னவோ இந்தியா அந்த நிலையை எட்ட 50 ஆண்டுகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com