<$BlogRSDUrl$>

Wednesday, January 19, 2005

பாத்திரத்தில் வார்த்தை வரும் ... ?


நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே இப்படித்தான் நடக்கும்போல. முற்றும் வேறுபட்ட ஒரு மொழியின் ஒலிகள் அனைவருக்கும் கொஞ்சம் வினோதமாக இருக்கும் என்பது உண்மைதான். எனது சீனத்து நண்பர்கள், நண்பிகள் யாரும் இதைப் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இதைச் சொல்கிறேன்.

".... சீனாக்காரங்க பல வார்த்தைகளை எப்படி உருவாக்கி இருப்பாங்கன்னா... பாத்திரத்தைத் தூக்கித் தரையில் வீசுவாங்க அந்த சத்தத்தை ரெண்டு வார்த்தையாக்கிடுவாங்க.." இது என் நண்பன் அடிக்கடி சொல்வது. "Empty vessels make noise " அது சரி. ஆனா காலிப்பாத்திரத்தில் வார்த்தை வருமா , இது உண்மையா என்ன..?. :)

எது எப்படியோ நாம பேசறதைப் பார்த்து நிறையப் பேர் இதே மாதிரிதான் நினைக்கிறாங்க. நண்பரும், இன்னொரு ஈழத்து நண்பரும் பேசிக்கொண்டிருந்ததை வெகு நேரம் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நபர் அருகில் வந்து,

"... ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறிங்க..? பேச்சில் ஒரு ஏற்ற இறக்கம் இல்லாமல் நேர்கோடு மாதிரி இருக்குதே... உண்மையிலேயே நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது உங்களுக்குப் புரியுதா..? .." , இப்படிக் கேட்டுட்டுப் போனாராம்.

இதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. எனது நண்பனும், நானும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெர்மானிய நண்பர்,

"... உங்க மொழி ஆங்கிலத்தோட டயலக்டா ? .." , என்று கேட்டு எங்கள் இருவரின் அழகுத் தமிழை ஆங்கிலத்தின் வட்டாரமொழியாக்கி விட்டார். :(

ஒரு ஈழத்து நண்பர் சொல்வார்,
".... நீங்கல்லாம் என்ன தமிழ் பேசுறீங்க..? எல்லாத்தையும் இங்க்லீசில் சொல்லிட்டு க்டைசியா ரெண்டு வார்த்தைத் தமிழைச் சேர்த்து தமிழில் பேசுறதாச் சொல்றீங்க... "
| | |
Comments:
Jsri,
சீனத்து நண்பர்களை விட, நண்பிகளிடம்தான் கொஞ்சம் பயம். சரி அதனாலென்ன, யாராவது கேட்டால் பழியை யார் மீதாவது போட்டுத் தப்பிக்கவேண்டியதுதான். சீனத்து ஒலிகளைப் பற்றி நீங்களும்கூட அப்படித்தானே நினைத்தீர்கள்..?. ;~)
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com